ஃபிலிப் எம் பெய்லி, உளவியல் நிபுணர் கார்ல் கஸ்டவ் யுங்கின் கருத்தாக்கங்களை ஹோமியோபதி அறிவியலில் செழுமைப்படுத்தியவர். சல்ஃபர் ஆளுமையையும், காஸ்டிகம் ஆளுமையையும் தெளிவான கருத்துக்களோடு விளக்கியவர். சல்ஃபர்க்கு உதாணம் கார்ல் மார்க்ஸ், காஸ்டிக்கத்தின் ஆளுமை புரட்சியில் நேரடியாக க்களமிறங்கிப் போராடும் வீரனைப்போன்றது காஸ்டிகம் நியாயத்திற்காகவும், துன்பதில் உழலும் மனிதர்களுக்காகவும், பகுத்தறிந்த உண்மைகளின் அடிப்படையில் போராடும் ; சல்ஃபரோ தனது லட்சியங்களின் பால் அதீத ஈடுபாடு கொண்டது. லட்சியங்களை நிறைவேற்றும் அவா இருந்தாலும் நேரடியான போராட்ட பங்கெடுப்பை உறுதி செய்ய இயலாதது. ஃபிலிப்பின் விவாதங்களின் அடிப்படையில் சேகுவாராவையும், ஃபிரான்ஸ் ஃபேணானையும் காஸ்டிகத்தின் ஆளுமைக்கு உதாரணங்களாய்க்கொள்ளலாம்.
No comments:
Post a Comment