ஆல்டாஸ் ஹக்ஸ்லி 1954 ல் டோர்ஸ் ஆஃப் பர்ஸெப்ஷன் நூலை வெளியிட்டார். மெஸ்காலின் எனும் ட்ரக் உட்கொண்ட 8 மணி நேரத்திற்க்கு அவருக்கு நேர்ந்த அனுபவங்களை, மனப் பிறழ்வுகளை , வேற்று கிரகத்திற்க்குப் போய் வந்த உணர்வை தொகுத்துள்ளார். மெஸ்காலின், அமெரிக்க பழங்குடியினரின் வழிபாட்டுக்குரிய தொன்மம்; ஆன்மீகச் சடங்குகளின் போது, அவர்கள் அருந்தி மகிழும் குடி. மெஸ்காலின் பின்னால், ஆன்ஹலோனியம் லூயினி எனப் பெயரிடப்பட்டது
ஹோமியோபதியில், ஒவ்வொரு மருந்தும், மனித உடல்,மனங்களில் தான் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு, மெய்பிப்பாளர் குழு , மருந்தினை உட்கொண்டு தங்களுக்குத் தோன்றிய நோய்க்குறிகளை, மனப் பிறழ்வுகளை,பயங்களை, பதட்டத்தை, கனவுகளை, தொகுக்கிறார்கள்.இந்த அனுபவங்களிலிருந்துதான் ‘மெட்டீரியா மெடிக்கா’ உருவாகிறது.கடும் பாம்பு விஷங்களிலிருந்து, ஆர்ஸெனிக்,காரீயம் போன்ற மூலகங்கள் வரை, சுமார் 5000 மருந்துகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆன்ஹலோனியம் மெய்ப்பிக்கப்பட்ட மருந்து. உடல் மெலிவுற்றதாகவோ, அல்லது, பெருத்து விட்டதாகவோ, தலை நசுங்கிவிட்டதாகவோ தோற்றம் தருகிறது. பொருட்கள் மிக உயரமாகவோ அல்லது குள்ளமாகவோ தோன்றும். அடையாளச்சிக்கல், தான் உடலுக்கு வெளியே இருத்தல், சாகா வரம் பெறுதல், அனந்த்தத்தோடு ஐக்கியமாதல் போன்ற மனக்குறிகளும் நேரிடுகின்றன. ஏனைய, கள்ளிக்குடும்ப மருந்துகளைபோன்றே, இறுக்கம் ஆன்ஹலோனியத்திலும் காணப்படுகிறது. அர்ஜெண்டீனிய ஹோமியோபதியர் மாஸி ஐஸால்டி, ஆன்ஹலோனியத்தின் மருத்துவ குணங்களை மிகச்சிறப்பாகத்தொகுத்தவர்.
ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ஒற்றையனுபவம், அதிகம் பாராட்டப்பட்ட இலக்கியமானது. ஹோமியோபதியின் ஒவ்வொரு மருந்து மெய்பித்தலும், பூரண இலக்கிய அனுபவமாகும்..

No comments:
Post a Comment