Wednesday, 15 January 2014

யுவன் சந்திரசேகரின் சிறுகதை--” நூற்றிச் சொச்சம் நண்பர்கள்”-

நூற்றிச் சொச்சம் நண்பர்கள்:

நீண்ட சிறுகதை

 யுவன் சந்திர சேகர்.

சந்தான கோபாலன் வந்திருந்தார். என்னைப் பார்க்க. நல்ல மனிதர் தான். நிறையப் படித்தவர். படிக்கும் சுகத்துக்காகவே, ஏராளமாகவும், தீர்க்கமாகவும் படிக்கக் கூடியவர். படித்தவை யாவும் ஏதோ ஓரிடத்தில் சேகரமாகிச் செரித்து வளர் சிதை மாற்றத்துக்கு ஆளாக வேண்டுமா இல்லையா? சந்தானத்துக்கு அதுதான் நடக்கவில்லை. வெந்த அரிசி மசியாமல் மலக்குடலில் கிடப்பது போலத் தகவல்கள் ஊறின மண்டை. சரி அய்யா , அதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர் என்று கேட்டால் கோபம் வந்து விடும். நடப்பது எல்லாம் நான் நினைப்பதைக் கேட்டுக் கொண்டா நடக்கிறது? என்பது போல விதண்டாவாதத்தில் இறங்கிவிடுவார்.( intellectually strong; easily angered)

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு சிக்கல். நாம் எடுக்கும் நிலைக்கு எதிர் நிலையிலிருந்து மட்டுமே அவரால் பேச முடியும். நாம் பேச ஆரம்பித்ததற்குப் பிறகு தான் அவருடைய அன்றைய நிலை தெரிய வரும். நாம் விஞ்ஞானம் பேசினால் அவர் மெய்ஞ்ஞானம் என்பார். நாம் தத்துவத்தில் காலையூன்றினால் அவர் மனோதத்துவத்தில் போய் நிற்பார். நான் அரசியல் நிலைபாட்டைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் அவர் அத்வைதத்தில் நிலை கொள்வார்.( cannot tolerate contrary opinion)

ஒரு தடவை பெண்களைப்பற்றிப் பேச்சு வந்துவிட்டது. நான் யதேச்சையாக மார்புகளைப் பற்றி விடலைத் தனமாக ஏதோ ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டேன். எனக்கே இப்போது மறந்துவிட்டது. சந்தான கோபலன் ஆவேசமாகிவிட்டார்.

” என்னய்யா? புல்லரிக்கிறீர், எல்லாப் பாலூட்டிகளுக்கும் இருப்பது தானேய்யா, ஒருசுரப்பிக்கு அதன் பயன்பாடு தாண்டி இருக்கும் எந்த ஒரு பிம்பமும் பார்க்கிறவனின் மனக்குறளி தவிர வேறென்னய்யா? காளை மாட்டுக்குக் காமம் ஊறுவது பசு மாட்டின் மடுவைப் பார்த்து விட்டா? ரொம்பத்தான் அளக்கிறீரே.

தப்புத்தான் சார். நீங்கள் சொல்வது சரிதான்.” என்று ஒருவிதமாகச் சமாளித்தேன். அதோடு போயிருக்கலாம். ஒரு மணி நேரம் போலப் பேசிக்கொண்டிருந்த பிறகு- அன்று காற்றின் சுழியில் ஏதோ கோளாறு இருந்திருக்க வேண்டும். பாலுட்டுச் சுரப்பி பற்றி சற்றுத் தாழ்வாக ஏதோ கூறிவிட்டேன். பாய்ந்து விட்டார் பாய்ந்து.

“அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்? ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒவ்வொரு விசேஷ அங்கத்தைக் கொடுத்திருக்கிறது இயற்கை. இன உற்பத்தித் தூண்டப்பட வேண்டாமா? யானைக்குத்- தந்தம், மயிலுக்குத் தோகை, மானுக்கு உடலில் புள்ளி என்ற வரிசையில் தான் பெண்ணின் மார்பும் வருகிறது. சும்மா பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. பூவுக்கு நிறம் வாசம் எல்லாம் இருப்பது உம்ம சம்சாரம் தலையில் வச்சிக்கிறத்துக்கு மட்டும் தான்னு நினைச்சீரோ? இல்ல உம்ம சம்சாரம் பூ வச்சிக்கிற உள் நோக்கத்தில் நீர் இல்லேன்னு நினைச்சீரோ?

அன்று பெரும் பிரயாசைப்பட வேண்டியதாகிவிட்டது கொலைப் பழியிலிருந்து தப்ப. (censorious, reproachful,)

சந்தான கோபாலன் நம்மில் பலரிடத்தும் காணப்படும் குணத்தையே கொண்டிருக்கிறார். அதிகம் படித்தவர். எதிரில் பேசுவோரின் கருத்தை ஏற்றுகொள்ள முடியாதவர். எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர், கோபம் தாங்காமல் பொரிந்து தள்ளக் கூடியவர். இதகைய ஆளுமையை, ஹோமியோ அறிவியல் லைக்கோபோடியம் எனும் மருந்தின் ஆளுமைக்கூறுகளாகப் பார்க்கிறது. சந்தான கோபாலன் ஒரு லைக்கோபோடியம்.

இத்துயரர்களுக்கு, ரத்த அழுத்த நோய், மூல நோய், வாயுப் பொருமல், வயிற்றுப் புண், சர்க்கரை நோய்--ஏற்புத்திறன் அதிகம் காணப்படும். வயிற்றில் வாயு உப்புசத்தால், வீக்கம் காண்பதுபோல். இவர்களது அகந்தையும் வீங்கியே காணப்படும் என்கிறார், ஹோமியோ நிபுணர் ஜார்ஜ் வித்தல்காஸ்.

யுவன் சந்திர சேகர், சந்தான கோபாலன் எனும் கண்ணாடியில் நம் பிம்பங்களைத்தான் சிறப்பாகக் காட்டுவதாக எனக்குப் படுகிறது.!

No comments:

Post a Comment