Wednesday, 15 January 2014

ஸ்கார்லெட் மக்கா- வண்ணக்கிளியின் குறிமொழிகள்

ஸ்கார்லெட் மக்கா , ஒரு கிளி இனத்தைச் சேர்ந்த பறவை. தோராயமாக 3 அடி நீளம் கொண்ட பறவை.சிறகுகளில் பளிசென சிவப்பும், மஞ்சளும், நீலமும் மிளிரும். மத்திய, தென் அமெரிக்காவை வாழ்விடமாகக் கொண்டது. பெண் கிளி ஒரு சமயம் 2 முட்டைகள் இடும்; தாய் தகப்பன் இரண்டும் அடைகாக்கும்; 24 நாட்களில் குஞ்சு பொரிக்க இரண்டு ஆண்டுகள் வரை சிறிசுகள் பெரிசுகளோடு வாழும். சிறிசுகள், சுதந்திரமாய் பறந்து, வேற்றிடம் சென்று வாழும் வரை தாய்க்கிளி முட்டையிடுவதில்லை.

இனி! ஹோமியோபதியில் இக்கிளியின் சிறகுகளிலிருந்து மருந்து தயாரிக்கப்பட்டு, மருத்துவர் ஜோனதன் ஷோர் அவர்களால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மனக்குறிகள் சில கீழே தரப்பட்டுள்ளது.
எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது.
தான் சார்ந்த குழுவால் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
 நிறங்களில் சிவப்பும், நீலமும் அதிக விருப்பம்

 வெளிப்பட்டு சாத்தியம் அதிகம்
 முரண்படுவதை முன்போல் தவிர்ப்பதில்லை.
குழு சார்ந்த இயக்கம்
 ரத்தத்தில், குமிழ்கள்-
காமம் தூண்டும் மருந்து உட்கொண்டதாய், பிறழ் நம்பிக்கைகள்.
படோடோபச் செலவில் நாட்டம்
 தனித்துவம், வெளியில் சொல்லாமல், அழுத்தமாய் இருத்தல்
 தன் உண்மைகளை சொல்லிவிடல்.
தொடுதல் இன்பம்.
கனவு- சூழலுக்கேற்ப, தன்னால் மாற இயலாமை. நல்லதும், கெட்டதுமாய்.
கை நழுவி, பொருட்கள் விழுதல்

 மேற்கானும் குறிகள் எந்தத் துயரரிடம் காணப்படுகிறதோ அவருக்கு ஸ்கார்லெட் மக்கா மருந்து தரப்படும்.

No comments:

Post a Comment