அஷ்டாவக்கிரனின் ஒவ்வொரு உடல் திருகலுக்கும் யார் காரணம்? சனகனின் அவையில் ,சமய சம்வாதத்தில் தோற்றுப்போன அவன் தந்தையா? அல்லது அவரைத்தோற்கடித்த ஞானிகளா? உலகிலேயே பாதுகாப்பான இடம் கருவறை என நாம் எண்ணிக்கொண்டிருக்க, கருவறையிலேயே, தந்தையின் தோல்விகளால் எட்டுத் திரிபுகளுக்குள்ளானவன் அஷ்டாவக்கிரன். பல தலைமுறைகளின் கெட்டித்துப்போன, சட்டகமான ஆளும் கருத்தாக்கங்களே காரணம் எனப் புரிகிறது. பழந்த் திரிபு வாதங்கள்- உடல் , மனம் எல்லாவற்றிலும் புதுத் திரிபுகளை உருவாக்குகிறது.
பழம்புனிதக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்த்தால்,வளர்ச்சியற்றுக், குறுக்கப்பட்டு விளைந்த ஒரு பான்ஸாய் தலைமுறை, அடுத்த தலைமுறையைக் கருவிலேயே வக்கிரப்படுத்தி, திருகல்களை உருவாக்கிவிடும் சாத்தியப்பாடுதானே அஷ்டாவக்கிரன்.!
இதை எந்த மியாஸத்தில் வகைப்படுத்துவது? ஸைக்கொ சிஃபிலிடிக் தொடர்மம் தானே? இரு நூற்றாண்டுகளாய் இத்தகைய உடல்,மனப் பிறழ்வுகளை , தேக்கத்தை, நீண்டகால நோயுறுதலை, ஹோமியோபதி மியாஸக் கோட்பாட்டில் தானே விளக்கிவருகிறது!
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு ஆளும் அதிகார வர்க்கக் கருத்தாக்கங்கள், ஜீவித நியாயஙகளோடு, கடத்தப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொண்டால், பரிணாமவியல் அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் “ மீம்ஸ்” பயன்பாட்டுக் கொள்கை பொருத்தப்பாடுடையதென்றால்,, நிச்சயம் ஒரு அமளி chaos உருவாகும்தானே?
மீம்ஸ் –ஞானக் கடத்திகள் எனச் சொல்லப்பட்டதன் எதிர்மறையா? திரிபா? அல்லது, இன்றைய சமூக அமைதி குலைக்கும், சமூக மனிதனை பிளவுண்ட ஆளுமையாக்கி அலைக்கழிக்கும், கருத்துலக அதிகாரத்தின் மாயக் கண்ணிகளா?
சமகாலக் கலையும் இலக்கியமும், இந்நிலையை பேசுபொருளாக்கியிருக்கிறதா?
எழுத்தாளர் ஆதவன் மிகச் சுலபமாக எழுதிப் போவார். ” விரயமாவது சக்தியின் இயல்பே” என்று! எண்ட்ரோபியை வேறு யாரால் இவ்வளவு எளிதாய்ச் சொல்லிவிட முடியும். மெக்ஸிகன் ஹோமியோபதியர் பீ. எஸ். ஆர்ட்டேகா மியாஸம் கருதுகோளை, தலைமுறை தாண்டி நிகழும், அமளி, -” உயிராற்றலின் விரயம்” என்றே விளக்குகிறார். இவ்விரயத்தை எதிர்கொண்டால்தான் மேம்பட்ட உயிராற்றல் கொண்ட- மியாஸத்தின் தாக்கத்தை, அமளியை விரயத்தை சுலபமாக வெற்றிகொள்ளும் திறன் படைத்த (new eugenics) அடுத்த தலைமுறை உருவாகும் என்றும் கூறுவார்.!
”கருத்துரு- எதிர் கருத்துரு-சங்கமம் “ என வளர்ச்சியின் இயங்கியல் படி நிலைகளை விளக்கும், ஹெகலிய-மார்க்ஸிய சங்கிலித்தொடரில் மீம்ஸ் எல்லாப் படி நிலைகளிலும் இயக்கம் காட்டுவது அவதானிக்க்கூடியது தானே?
ஸைக்கோ-சிஃபிலிடிக் கழுத்துச் சுருக்கை அறுத்தெறிந்து, அமளியிலிருந்து விடுதலை நோக்கிப் பயணிக்கும் புரொமீதஸ் தலைமுறை எப்படி/எப்போது வரும்.? வரவேற்றுப்பாட ஷெல்லிகள் இருப்பார்களா? .

No comments:
Post a Comment