Wednesday, 15 January 2014

அ. முத்துலிங்கத்தின் சிறுகதை--”கல்லறையிலிருந்து”

அ. முத்துலிங்கத்தின் சிறு கதை “’” கல்லறை”” யிலிருந்து.

ஃப்ரான்ஸிஸ் தேவசகாயம் ஒரு மன நோய் மருத்துவர். கடந்த நான்கு வருடங்களாக அவர் ஒரு தனி க்ளினிக் நடத்தி வந்தார். அன்று இரவு மறுபடியும் அந்தக் கனவு வந்து விட்டது. அந்தக் கனவே அவருக்கு பெரும் இம்சையாகி விட்டது. இரவிலே நித்திரை கொள்வதற்கே அவர் பயந்தார். ஒரு நாளா , இரண்டு நாளா? கனவின் முடிவு மட்டும் தெரிவதாய் இல்லை. அந்த நேரம் பார்த்து முழிப்பு வந்து விடுகிறது.

அவரின் கனவில், ஒரு நீண்ட சாலை. இரண்டு பக்கமும் மரங்கள். வேறு நடமாட்டமே இல்லை. ஒரே அமைதி. தலையிலிருந்து கால்வரை கறுப்பு அங்கியை அவர் அணிந்திருந்தார். கண்களுக்குத் துளை வைத்த அங்கி. தூரத்தில் உயரமான சர்ச் தென்பட்டது. பிரம்மாண்டமான கதவுகள். அவர் கால்கள் அந்த சர்ச்சுக்க்ப் பின்னால் இருந்த மயானத்தை நோக்கிச் செல்லத் தொடங்கின.

இப்பொழுது வேறு பல கறுப்பு அங்கிகளும் சேர்ந்து கொண்டன. ஒரு சவக்குழியை நோக்கி விரைந்தன. திடீரென்று அந்த இடத்தில் பெண்ணொருத்தி தோன்றினாள். வெள்ளை ஆடை உடுத்தி தேவதை போல் இருந்தவள் , அவரைக்குறி வைத்து வந்து அவர் கையை எட்டிப் பற்றினாள். சவக்குழி இப்போது நன்றாகத் தெரிந்தது. அதன் ஆழத்திலே ஒரு சவப்பெட்டி மூடிய படியே கிடந்தது. பக்கத்திலே பளிங்குக் கல்லில் வாசகம் எழுதித் தயாராய் இருந்தது. அந்தப் பெண் புன்னகை செய்தபடி அதைச் சுட்டிக் காட்டினாள். அதில் அவருடைய பெயர் ‘ ஃப்ரான்ஸிஸ் தேவ சகாயம் என்று எழுதி இருந்தது. பிறந்த தேதியைப் படித்தார். மிகச் சரியாக இருந்தது. 22 ஏப்ரல் 1955. இறந்த தேதியைப் பார்த்தார். அதைப் படிப்பதற்குள் கறுப்பு அங்கிப் பட்டாளம் அவர்களை நெருக்கித் தள்ளியது. அவருக்கு முழிப்பு வந்து விட்டது. அந்த இடத்தில் ஒவ்வொரு நாளும் கனவு சரியாக முறிந்து விடும்.

ஓரிரு நாட்களில் கனவில் வந்த வெண்ணிற ஆடை அழகி க்றிஸ்டீ அவரைப் பதட்டத்துடன் காண வருகிறாள். அவரது கனவைப்போலவே தனக்கும் கனவு வருவதாகக் கூறுகிறாள். அவருக்கும் அதே கனவு தான் என்று புரிகிறது. ஆனால் ஒரே வித்தியாசம். அவளுக்கு அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயரும் பிறந்த தேதியும் நினைவிலில்லை. ஆனால், இறந்த தேதி ஞாபகம் இருப்பதாகக் கூறுகிறாள். இதயம் படபடக்க தேவசகாயம் என்ன தேதி என்று கேட்கிறார். மறு நாள்! செப்டம்பர் 12!. கதை இப்படி முடிகிறது. மிக அருமையாகச் சொல்லப்பட்ட சிறுகதை. கனவு, கல்லறை, சவப்பெட்டி, உயிரோடு இருப்பவர் இறந்து விட்டதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது, கனவில் வந்தவள் நேரிலேயே வந்து கதையின் முடிச்சை அவிழ்க்கிறாள், அவர் இறந்த தேதியை உயிரோடு இருப்பவரிடம் சொல்கிறாள்; நாளை என்று!. பிரம்மாத மான கதைப்பின்னல்.

சரி. இனி விஷயத்திற்கு வருவோம். எனக்கு ஃப்ரான்ஸிஸ் தேவசகாயகத்தை மிகவும் பிடித்து விட்டது. அவர் மன நோய் நிபுணர் என்றாலும் அவருடைய மரண பயம் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் பெண்ணின் தேவைகள் சிவப்புத் தலை அழகியாயும், வெண்ணிற ஆடை தேவதையாயும் கனவிலும், பின் நேரிலுமாகச் சுற்றிச்சுற்றி வந்து, காமம் தரும் உயிர்ப்பையும், மரண நாள் தேதியையும் இணைக்கும் பாலமாகிறாள். தேவ சகாயத்தின் கனவில் ஈராஸும் தனாட்டாஸும்(வாழ்வுந்தமும்,மரண உந்தமும்) கண்ணி கோர்த்து நிற்கிறது.

பரீக்க்ஷா நாடகக் குழுவினர் நிகழ்த்திய பாதல் சர்க்கார் நாடகமொன்றில்( பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?) தற்கொலை செய்து கொண்டவனும், அவன் பின்புலத்தை வைத்து என்ன நடந்திருக்கலாம் எனக் கதை சொல்பவனும் மேடையில் சந்தித்து உரையாடுவர்.

கதை எழுதுபவன்: பாலு நீ ஏன் தற்கொலை செய்து கொண்டாய்?

பாலு: நீ ஏன் இன்னும் தற்கொலை செய்து கொள்ள வில்லை?.

இந்த உரையாடல் ஏனோ ஃப்ரான்ஸிஸ் தேவ சகாயம் குறித்து யோசிக்கையில் நினைவுக்கு வருகிறது.

ஸிந்தெஸிஸ் ரெபர்டரியில் தேவ சகாயத்தின் கனவின் வெளிப்பாடுகளுக்குப் பொருத்தமான குறி மொழிகளைத்(rubrics) தேடினேன்.
Dreams- seeing buildings, big
 Churchyard
 Dreams of the dead
 Dead bodies returning to life
 Forms: black
 Frightful dream, waking him
 Corpse coming alive
 Ghosts- black
 Being pursued by phantoms,
 Dreams, being seized by the finger
 Dream- visionary- clairvoyant
 Walking in dreams, in woods
 Fear to go to sleep
 Fear- waking from a dream
 Inquisitive

இக் குறிமொழிகள் அதிகம் இரு மருந்துகளைச் சுட்டுகின்றன. தேவ சகாயத்தின் கனவு ஸல்ஃபரையும், ஸைலீஷியாவையும் நினைவிற்குக் கொண்டு வருகிறது. தேவசகாயம், தனக்குள் அதிகம் சிந்தனை வயப்படுபவர், நன்றாகக் கவிதை சொல்கிறார். மனைவியிடமிருந்தும், மகளிடமிருந்தும், இன்ச் இன்சாக ஒவ்வொரு நாளும் விலகி தனிமயில் நிற்கிறார். அவருக்கு எல்லாவற்றிற்கும் காரணங்களும், விவாதங்களும் ஆயத்த நிலையில் உள்ளன. தன் மகள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதிலிருந்து, தன் கனவு வரை. ஃப்ராய்டைத் துனைக்கழைத்து அவர் யோசிப்பதையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் ஸல்ஃபரே ஃப்ரான்ஸிஸ் தேவ சகாயத்தின் மருந்தாளுமையாகத் தோன்றுகிறது.

படைப்பாளி அ. முத்துலிங்கம் ஒரு கனவைப் பதிவு செய்து, சிறுகதைக்கலைக்கு முன் மாதிரியாய் மிளிரச் செய்திருக்கிறார். ஹோமியோபதி மாணவர்களும், இதுவரை இக்கதையைப் படிக்காத என் நண்பர்களும் கட்டாயம் படிக்க வேண்டும். ஒரு கலை விருந்து உங்களுக்காய் காத்திருக்கிறது.!!.

No comments:

Post a Comment