திரு எஸ். ராமகிரிஷ்ணனின் துயில் நாவலில் , சின்னராணியின் ஊர்த்தோழியாக நங்கா என்று ஒரு படைப்பு.
நங்காவிற்கோ பதிணந்து வயதிலேயே கல்யாண ஆசைத் துவங்கிவிட்டது. அதனால் ஊரில், யாருக்குத்திருமணம் நடைபெற்றாலும், அவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்துவிடுவாள். நங்கா யாரைப் பார்த்தாலும் கல்யாணம் பற்றியே பேசுவாள். அதிலும் பச்சை பச்சையாக அவள் சம்போகம் பற்றிச் சொல்வதைக்கேட்பதற்காகவே ருதுவான பெண்கள் அவளோடு பல்லாங்குழிஆடுவார்கள்.......
நங்காவிற்கு சித்தம் கலங்கிப்போய்விட்டதாகச் சொல்வார்கள்.யாராவது கர்ப்பிணிப்பெண்ணை வழியில் பார்த்தால் நங்கா ஓடிப்போய், அவள் வயிற்றை முத்தமிட்டு, நானும் இப்படி நடக்கணும்னு ஆசைப்படுகிறேன், ஒரு ஆம்பளையும் வசமாகச் சிக்க மாடேங்கிறாங்க என்று சொல்லிச் சிரிப்பாள்.........
திருமணமாகி, அய்ந்து மாதங்களுக்குப்பிறகு சின்னராணி, கர்ப்பினியாகி, ஊர் திரும்பியபோது கோவில் மண்டபத்தில் நங்கா தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போய் விட்டதாகச் சொன்னார்கள். கோவில் சுவர் முழுதும், தன் பெயரோடு ஊரிலிருந்த பல ஆண்களின் பெயரைச் சேர்த்து எழுதி வைத்திருந்தாள். தன் ஆடைகளைக்களைந்து எறிந்துவிட்டு, கோவில் மண்டபத்தில் ஒரு நாள் முழுதும் படுத்துக்கிடந்தாள். ...
இது நடந்த நாலாம் நாளில் தூக்குப்போட்டு த்தொங்கி செத்தும்போனாள்.
ஹையோஸியாமஸ் என்று ஒரு ஹோமியோபதி மருந்து. அதன், குணங்கள் அப்படியே நங்காவின் பாத்திரப்படைப்பிற்கு பொருந்திவருகிறது. காமஇச்சை மிகுதல், வெட்க உணர்வு அற்றுப்போதல், ஆடைகளைக்களைந்து, நிர்வாணமாய் திரிதல், தற்கொலை எண்ணங்கள் பொறாமை மிகுதல் ஆகிய குறிகள் நங்காவின் மனோ நிலைக்கு உதாரணம்.
நங்கா ஒரு ஹையோஸியாமஸ்.

No comments:
Post a Comment