Wednesday, 15 January 2014

கொள்ளை நோய்களும், ஹோமியோபதியும்

கொள்ளை நோய்கள் திடீர் திடீரென்று, புதிய புதிய நாமகரணங்கள் சூட்டப்பட்டு, சிக்குன் குனியா, சார்ஸ்,ஃப்ளூ, டெங்கு, என்று மக்களைப் பீதிக்குள்ளாக்கும். அல்லோபதி மருத்துவர்கள் மாற்று மருத்துவ மருந்துகளைப் பயன்படுத்துவர், பரிந்துரைப்பர்.

உலகத்தையே, வென்று, தன்னை, மகா அலெக்ஸாண்டர் என்று பட்டம் சூட்டிக்கொண்டவன், ஊர் திரும்பும் வேளையில், பாபிலோனியாவில், டைபஸ் காய்ச்சலில் மாண்டுபோனான்.

ருஷ்யா, டைபஸ் காய்ச்சலில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடு. லெனின், புரட்சிக்குப்பின், அதிகாரத்தையும், நிர்வாகத்தையும், கையில் எடுத்துக்கொண்டபோது, பொறுப்போடு, பேசிய ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது. கம்யூனிஸம், டைபஸ் காய்ச்சலை ஒழிக்கவேண்டும்; இல்லையேல், டைபஸ், கம்யூனிஸத்தைக்கொன்றுவிடும்.

நெப்போலியன் , ருஷ்யாவின் மீது படையெடுத்துச் செல்கிறான். உயிர்ச் சேதம் அதிகம், ஆனாலும் இறுதி வெற்றி கிட்டவில்லை. ருஷ்யர்கள், யுத்த தந்திரமாய், பின்வாங்கும்போது, சேமிப்புகள் அனைத்தையும், கொளுத்திவிடுகின்றனர். பசி, பட்டினி நோயோடு நெப்போலியனின் படை ஊர் திரும்பும் வேளையில், டைபஸ் கொள்ளை நோய் தாக்குகிறது. ஃப்ரான்ஸ் முழுக்கக் காய்ச்சல். ஆயிரக் கணக்கில், மக்கள் சிகிச்சை பலனின்றி, மடிகின்றனர். கொள்ளை நோய் ஜெர்மனிக்கும் பரவி , சாவின் பிடியில் மக்கள் தத்தளிக்கின்றனர்.
ஹானெமன், தனது மெட்டீரியா மெடிக்காவில், டைபஸை ஒத்த நோய்க் குறிகள், ப்ரையோனியாவிலும், ரஸ்டாக்ஸிலும், தோன்றுவதைக்கண்டு, இந்த இரண்டு மருந்துகளைக்கொண்டே சிகிச்சை அளிக்கிறார். இரு நாடுகளிலும் இவ்விரண்டு மருந்துகளை வினியோகிகிறார். கொள்ளை நோய் கட்டுப்பாட்டுக்குள் வர மக்களின் இன்னல் மறைகிறது. 1803ல் ஒத்ததை ஒத்தது நலமாக்கும் விதி நிரூபிக்கப்பட்டு, மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 2000 வருடங்களாக, புறக்கணிக்கப்பட்டு வந்த ஒரு உயரிய மருத்துவ அறிவியல் கொள்கை, 1830களில் அமெரிக்காவில், ஃபிலெடல்ஃபியா பல்கலைக்கழக பாடத்திட்டமாக அறிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment