ம்யூரியாட்டிக் ஆசிட்- புரிதலில் ஒரு புதிய பரிமாணம்
ஹோமியோபதி
அறிவியலில் மருந்துகளும் தனித் தனியாக நிரூபிக்கப் பட்டிருப்பதும், அதன் அடிப்படையில்
மெட்டீரியா மெடிக்கா கட்டமைக்கப் பட்டிருப்பதும் எல்லோரும் அறிந்ததே. தனி மருந்திலிருந்து, தொகுப்பாய்வுக்குப் பிள்ளையார்
சுழி போட்டவர் ஈ.ஏ.ஃபாரிங்க்டன் என்றால் மிகையாகாது. அவரது நூல் க்ளினிக்கல் மெட்டீரியா மெடிக்கா, தாவரக்
குடும்பங்கள், பாம்புகள், அமிலங்கள், ,தனிமங்கள் என்று தொகுப்பாய்வின் தோற்றுவாயைக்
காணலாம். அமில மருந்துகளின் பொதுப் பண்புகளை
அவரே முதலில் எல்லோரது கவனத்திற்குக் கொண்டு வந்தவர். 2000க்குப் பின்னால், இத்தாலிய
ஹோமியோபதியர், அமில மருந்துகளில் சிறப்புக் கவனம் குவித்து, தொகுப்பாய்வை ஹோமியோபதி
கூறும் நல்லுலகத்திற்கு அறிவித்திருக்கிறார்.
அமில
மருந்துகளில் தினசரிப் புழக்கத்திலுள்ள மருந்து ம்யூரியாட்டிக் ஆசிட். நோய் தாக்குதலினால்
கடுமையான பலகீனம், படுக்கையில் அப்படியே சரிவது, முகத்தில் சவக்களை, சிறு நீர் கழிக்க
ஆரம்பிக்கும் போதே, கட்டுப் பாடின்றி, மலம் வெளியேறுதல், பசியின்மை, டைஃபாயிட் சுரம்
போன்ற குறிகள் அதன் கீ நோட்ஸ் என்று சொல்லலாம். பொதுவாக, இலவச மருத்துவ முகாம்களில்,
சுரம் கண்டவர்களுக்கு, அரைமணி நேர இடைவெளியில் முதல் மூன்று டோஸ்கள் ரஸ்டாக்ஸ் 30,
அடுத்த மூன்று டோஸ்கள் பெல்லடோன்னா 30, அடுத்த மூன்று டோஸ்கள் ம்யூரியாட்டிக் ஆசிட்
30 கொடுப்பது வழக்கம். சுரம் தணிந்து, பலகீனம்
குறைந்து, உடலும் மனமும் பழைய ஆரோக்கிய நிலக்குத் திரும்புவதைக் கண்டிருக்கிறோம். குறிப்பாகக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும்,
ம்யூரியாட்டிக் ஆசிட் கட்டாயம் கொடுக்க வேண்டும் என எங்கள் ஆசான் கூறுவார்.
வழமை
இப்படியிருக்க, 80 களில், ஹோமியோ அரங்கத்தில் முன்னனி நாயகனான ஜார்ஜ் வித்தல்காஸ்,
இன்னும் ஆழமான மனத்தளத்தில், இம்மருந்தை விளக்கினார். துயரரர் ஏதோ பேரிடர் நடந்துவிட்டது
போல் உணர்கிறார். அவரிடம், இவ்விழப்பின் காரணமாக மனதின் அடித்தளத்தில் ஒரு ஈடுகட்டமுடியாத
பதட்டம் காணப்படுகிறது. ”
நான் வாழ்ந்து என்ன பயன்? இறந்துவிடுவதே நல்லது”
மனம் விட்டுப்போய் விடுகிறது. பெரும் களைப்பும், மிக நீண்ட உறக்கத்திலும் மனம் தன்னை
இழந்துவிடுகிறது. சிகிச்சை எடுத்துக் கொள்வதில் நம்பிக்கை முழுக்கவும் போய்விடுகிறது. ‘”கதவைச் சார்த்துங்கள், என்னைக் கொஞ்சம் தனியாய்
இருக்க விடுங்கள்” இந்த வார்த்தைப் பிரயோகங்களே
அவரது நிரந்தர மொழிதலாகிறது. அந்த அளவிற்கான
மனக் களைப்பு. துயரரைப் பொறுத்தவரை எல்லாமே முடிந்துவிட்டது. சட்டி சுட்டதடா- கைவிட்டதடா- கையறு நிலை.
90களின்
இறுதியில், தனிம அட்டவணைத் தொகுப்பாய்வை முன்னெடுத்த ஜேன் ஸ்கால்ட்டன், ம்யூரியாட்டி
ஆசிடுக்கு, குழந்தைகளுக்குப் பொருத்தமான, உளவியல் ரீதியான, இடிப்பஸ் சிக்கலுக்கு இணக்கமான
விளக்கத்தையும் கொடுத்தார். அமிலத் தொகுப்பின் குணங்களையும், ம்யூரியாட்டிக்கம் ராடிக்கல்
குணங்களையும் அவர் இணைத்துக் கீழ்வரும் சித்திரத்தை தருகின்றார்.
உண்மையான
அக்கறையும், பரிபாலித்தலும் கோரல்
எப்போதும்
தாயோடு இருத்தலை நாடுதல்
தன்பால்
முழுக் கவனத்தையும் கோரல்
தாயோடு
ஒன்றித்தல்
தாயைச்
சார்ந்திருத்தல்
சோர்வுற்ற
தாய்
கழிவிரக்கம்
மற்றும் அப்பாவித்தனமும்
தனித்திருத்தலும்,
குறைகூறுதலும்
மாசிம்மோ
மங்கியலோவாரி, இத்தாலிய ஹோமியோபதியர் இன்னும் சற்று விரிவான தளத்தில் அ/னுகுகிறார். அவரைப் பொறுத்தவரை அமில மர்ந்துகள் அனைத்திற்கும்
பொதுவான குணம், இழப்பு:- பணம் உடல் எடை,தந்தை,மலம்
வேலைப்
பளு
சீரணக்
கோளாறுகள்
உடல்
இளைத்தல்
சந்தோஷத்தை
இழத்தல்
மோசமான
குடும்ப வரலாறு
தலைகுனிவுக்கு
உள்ளாதல்
மறக்க
முயற்சித்தல்
இணங்க
முடியாமல் எளிதாய் மனக் காயம் ஏற்றல்
எண்ணற்ற
துன்பம் தரும் உறவுகள்
பலகீனமான
உடல்,மனக் கட்டுமாணமே நோய்
பாலாடை
விரும்புதல், அமில உணவுகள். பழங்கள் ஒவ்வாமை
இவை
தவிர, ம்யூரியாட்டிக்ஆசிடுக்கான தனிப் பண்புகளையும் பட்டியலிடுகிறார்.
தூக்கத்திலும்
அமைதியின்மை---
கனவுகளிலும்
அழுகிய லார்வாக்கள் குறித்த பயம்---
மனத்தளவில்
அவர் உள்ளூர அழுகிக் கொண்டிருக்கலாம்
பற்கள்
அழுகி சொத்தையாகலாம்
இந்த
லார்வா என்பது, பெண்கள் பூப்படையும் பருவத்தைக் குறிக்கலாம்
மிக
மோசமான தலைகுனிவு, அவமானம்
மிக
இளைய வயதிலேயே, தீவிர பல் சார்ந்த நோயும், மூட்டழற்சியும்
தந்தையையும்
மகனையும் வெறுத்தல். ஆனால் தாயை நேசித்தல்
மருந்தெடுக்க
விருப்பமின்மை
யாரோடும்
இணக்கமான நேசமில்லை, எல்லோராலும் கைவிடப்பட்டதாகக் குறை கூறல்
வாய்ப்புண்; மலச்சிக்கலும் வயிற்றோட்டமும் மாறி மாறி வருதல்
கெட்டித்த
மலம் இல்லாமலே, குதத்தில் குருதிக் கசிவு
பொறுமையின்மை.,
யாரோடும் இசைபட வாழும் சாத்தியமின்மை., அமைதியான சினம்
இக்கோபமே
இத்துயரர்களை, மன இறுக்கத்தில் முற்றிலும் இழந்துவிடாமல் இருக்க உதவி செய்யும்.
தன்னைத்
தானே நொந்து கொள்ளுதலினால் நோயுறுதல்
மனரீதியான
செயலிழப்பு, மற்றும் பாலியல் சார்ந்த மலட்டுத்தன்மை
கனவு-
தாய் மரணமடைவதாக
பிறழ்
நம்பிக்கை- மிருகங்கள், புழுக்கள் ஊர்வதாக
பேசுதல்:
பேசிக்கொண்டே இருத்தல்.- அமைதியாய் இருக்க, மௌனிக்க இயலாமை
சுயம்
நசித்தல், மொத்தத்தில்
எளிதாக
நொறுங்கிவிடும் உடல்,மனக் கட்டுமாணம் எனவே வாழ்வில் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது
என எண்ணுதல்
ம்யூரியாட்டிக்
ஆசிட் 70 களுக்குப் பின் இத்தகைய விரிவான விளக்கம் பெற்றுள்ளதைக் காணலாம். பீடியாட்ரிக்
, ஜீரியாட்ரிக் மற்றும் ஸைக்கியாட்ரிக் ம்யூரியாட்ரிக் ஆசிட் ஒருசேரப் பரினாம வளர்ச்சி
பெறுவதை அவதானிக்க முடிகிறது
‘
No comments:
Post a Comment