Wednesday, 15 January 2014

மக்கள் மருத்துவத்தைத் தேடி.......

அதிஷ்ட வசமாக, இந்தியாவில், காந்திஜி, டாகூர், பாபு ராஜேண்ட்ர ப்ரசாத் மற்றும் ராஜ் அமிர்த் கௌர் ஆகியோரது கூட்டுப் பரிந்துரைகளாலும், வங்காள ஹோமியோபதியர்களின் முயற்சியாலும் , ஹோமியோபதி அரசால் 1948ல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையானது . சார்ஸ், ஃப்ளூ, டெங்கு, சிக்குன் குனியா, எந்தக் கொள்ளை நோய் வந்தாலும், மெய்ப்பிக்கப்பட்ட மருந்துகளின் மெட்டீரியா மெடிக்கா இருப்பதனால் ஹோமியோபதியர்களால் எளிதாக நலப்படுத்துவதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முடிகிறது. ஹோமியோபதி மருந்துகள் எதுவும் பாக்டீரியா, வைரஸ்களை கொல்லும் கிருமி நாசினியாக செயல் படுவதில்லை. உயிரியின் நோய்த் தடுப்பாற்றலைக் கூட்டுவதால் மட்டுமே, நோயை விரட்டியடிக்கமுடியும் என்பது கோட்பாடு. இத்தகைய அடிப்படைவேறுபாடுகள் இருக்கையில், ஹோமியோபதியின் செய்னேர்த்தியை அளவிடவும், தரக் கட்டுப்பாட்டு சோதனைகளுக்காகவும், எந்த சர்வ தேச வல்லுனரிடம், நிறுவனத்திடம் அக்மார்க் சர்ட்டிஃபிக்கட் வாங்க கைகட்டி நிற்க வேண்டும்.?யார் அந்த சட்டாம்பிள்ளை வல்லு நர்கள்?

நல்ல இலக்கியம் தேடிப் படிக்கிறோம்; நல்ல சினிமா தேடிப் பார்க்கிறோம். நல்ல நாடகம் நிகழ்த்துபவர்களை ஆதரிக்கிறோம்- இப்படித்தான் தெரிந்த மருத்துவ மருத்துவ சிந்தனைப் பள்ளிகளுள் நல்ல மருத்துவ அறிவியலையும் தேடுகிறோம். 1950களில், கேரளாவில் , மருத்துவர் ரம்னாலால் பட்டேல் , புகழ்பெற்ற ஹோமியோபதியர், டாட்டோபதி மருந்துகளை ஹோமியோபதி மருத்துவ அறிவியலின் அடிப்படையில் உற்பத்தி செய்தார். TAUTOPATHI என்றால் என்ன? அல்லோபதி மருந்துகளின் பக்க விளைவுகளைத் தொகுத்து, அந்த அல்லோபதி மருந்துகளை, ஹோமியோ அறிவியலின் அடிப்படயில் தயாரித்து அவதிப்படும் துயரர்ளுக்கு அளித்து நலமாக்குவது.• பென்சிலின், ஹாலோபெரிடால், கார்ட்டிசோன், க்ளோரம்பெனிக்கால் பீ சீ ஜீ, என 150 மருந்துகளுக்கு மேலாக 30, 200 வீரியங்களில் கிடைக்கின்றன. இன்றும், சர்வ தேசிய அளவில் டாட்டோபதி மருந்துகள் ஹோமியோபதி மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பென்சிலின் தரும், பக்க விளைவுகளுக்கு, பென்சிலின் 6 அல்லது பென்சிலின் 30 வீரியத்தில் மருந்துகள் கொடுக்கப்படும். இந்த அறிவியல் இந்தியாவில் தாம் முதன் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தரக் கட்டுப்பாடுகள் எனும் பெயரில் அமெரிக்காவில் 1930களில் பல ஹோமியோபதி கல்லூரிகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. ஆனால் மக்கள் ஆதரவினால், ஹோமியோபதி ஒரு சிறப்பு மேற்கல்வியாக பரிணமித்தது. 70களில் கிரேக்க ஹோமியோபதியர் ஜார்ஜ் வித்தல்காஸ் அமெரிக்கா சென்று பல அல்லோபதி மருத்துவர்களுக்கு ஹோமியோபதி அறிவியலைக் கற்பித்தார்.மீண்டும் கல்லூரிகள் வந்தன .ஹோமியோபதி மறுமலர்ச்சி பெற்றது. நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஃப்ரிட்ஜாஃப் காப்ரா போன்ற அறிஞர்களின் முயற்சியால், alternative nobel prize for homeopathy எனும் விருது வித்தல்காஸுக்கு வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment