அசோக் நகர், மூன்றாம் அவென்யூ, புத்தர் அறிவுத்திருக்கோயில்
அன்று காலை கண் விழிக்கும்போதே செல் ஃபோனில் அழைப்பு வந்தது. வயலினும் மொஹேர்சிங்கும் இணந்த இசை. எனக்குப் பிடித்தமான எல்.சுப்ரமணியத்தின் ஃப்யூஷன் இசை. ஹல்லோ! ஜெய் பீம் ஜெய் புத்தம்!..... எதிர் முனையில் தமிழ் மறையான் ஐயா. இன்னிக்கி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை; மெடிக்கல் காம்ப்.” நினவு படுத்துகிறார்.
பதினைந்து வருடங்களாக ஒவ்வொரு மாதமும் இந்த அழைப்பு வரும். ஹோமியோ இலவச சிகிச்சை முகாமை ஆரம்பித்து நடத்துபவர் மருத்துவர் டீ. குமரேசன். எம்.டீ(ஹோமியோ). ஹோமியோபதிச்சுடர் இதழ் ஆசிரியர். எங்கள் குழுவினர் ஐவரும் ஆஜராகிவிடுவோம். 70 -75 துயரர்கள் வருவார்கள்.
அன்று ஒன்பதரை மணிக்கே கூட்டம் களை கட்டிவிட்டது. அந்த வீட்டை. புத்தர்-அம்பேத்கர் அறிவுத் திருக்கோயில் என்றே அழைக்கின்றனர். எனக்கு புத்தர் சிலைக்கு அருகிலேயே இருக்கை. டாக்டர். அம்பேத்கர் சிலைக்கு அருகில் பாலயோகானந்தின் இருக்கை. மருந்துகள் கலந்து லேபிள் ஒட்டி ,விவரமாய் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லித் தர வேண்டியது அவர் வேலை. சிலைகள் இருக்குமிடம் சற்றே விசாலமான பெரிய அறைகள் என்று சொல்லலாம். தமிழ் மறையான் இல்லத்தின் ஒரு பகுதி.
ஒவ்வொரு துயரராய் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி, சீட்டில் மருந்தை எழுதி வாங்கிக்கொண்டு செல்வர். பாலா சீட்டில் குறித்த மருந்தை அதன் வீரியத்தில் தயார் செய்து கொடுப்பார். நான்கு பெட்டிகள் நிறைய, குறைந்தது 300 மருந்துகள் ஸ்டாக்கில் எப்போதுமிருக்கும். பதினோரு மணி வாக்கில் வீட்டின் பெண்கள் அங்கு வந்திருக்கிற அனைவருக்கும் மூலிகை டீ வழங்குவர். இரண்டு மணிவரை முகாம் நடக்கும். முடிவில் அன்று அங்கு வேலை செய்த அனைவருக்கும் சாப்பாடும் உண்டு. எல்லா செலவுகளும் மருத்துவர் குமரேசனையும், தமிழ்மறையானையும் சேரும். துயரர்களை விசாரித்து, பொருத்தமான மருந்துகள் பரிந்துரைப்பது எங்கள் குழுவினரின் வேலை.
அன்று நல்ல கூட்டம். கொஞ்சம் மந்த கதியில் தான் நடக்கிறது. இன்னும் பார்க்க வேண்டிய துயரர்கள் இருபது பேராவது இருப்பார்கள். தலைக்கு மேல் மின்விசிறி வேகமாக சுழல்கிறது. பரீக்க்ஷா ராஜாமணியின் சித்தப்பா திரு பாலசுப்ரமணியம் அவர்களின் உபயம். ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. அதிலிருந்து என்பது வயது கடந்த ஒருவரை இறக்கி அழைத்து வருகிறார்கள். கூட வரும் பெண்மணிக்கு எப்படியும் எழுபது வயதுக்கு மேல் இருக்கும். அவர்களது தள்ளாமை, காத்திருப்பவர்களின் ஏகோபித்த இரக்கத்தை சம்பாதித்துவிட, அவர்களை முதலில் பார்த்து அனுப்பிவிட எல்லோரும் பரிந்துரைக்கிரார்கள். தமிழ்மறையான் பெயர் எழுதி சீட்டு தருகிறார்.
பெரியவர் என் முன்னால் அமர்ந்திருக்கிறார். அருகில் அவர் மனைவி. பெரியவர் இடுப்பில் வேஷ்டி மட்டும். சட்டை இல்லை இருவருக்கும் முகத்தில் இருமை, ஆழப்பதிந்த முகச் சுருக்கங்கள்.
சொல்லுங்கம்மா. ஐயாவுக்கு என்ன செய்யுது?…..
உடம்புக்கு ஒன்னுமில்லீங்க……. தலையிலதான்… அவரது தலையில் உச்சியில் தடவிக்காட்டுகிறார். ஒரு கொட்டாங்கச்சி கவிழ்த்தாற்போல், கெட்டியாக, சொர சொரவென கெட்டி தட்டிப் போயிருக்கிறது.
அரிப்பிருக்குதா?
இல்லீங்க.
வலி?
சில சமயம் குத்தலெடுக்குது. மத்தபடி ஒண்ணுமில்லை.
பசியெல்லாம் எப்பிடி?
மணிக்கொருதரம் ஏதாவது சாப்பிடக் கேக்குறார். நான் எங்கே போவேன்? புள்ளைக கவனிக்கல. நான் அல்லாடுரேன். மனைவி பதில் சொல்ல அவரிடை மறிக்கிறார்.
ஆமாம் இவதான் மணிக்கொருதரம் பொங்கிப் போடுறாவ….. போக்கத்தவ…வாயைத்திறந்தா பொய்தான். முகத்தில் எரிச்சல், கடுங்கோபம். தமிழ்மறையான் அந்தம்மாவை ஜாடையாய் அசமடக்குகிறார்.
அவர் தலையைத் தடவிப்பார்க்கிறேன். மேடு கட்டி பாறாங்கல் போலிருக்கிறது. ஐயாவுக்கு இனிப்பு பிடிக்குமா?
ம்.. சாப்பிடுறதான்…
உப்பு?
ரொம்ப கம்மி தான் சார்.
மலச்சிக்கல் இருக்கா?
சில நாளு நாளைக்கி ரெண்டுதரம் , மூணுதரம் தண்ணியா போராரு; ஒரு ஐஞ்சு நாளக்கி போவே மாட்டாரு. எரிஞ்சி எரிஞ்சி விளுவாரு. சாப்பிடுறதெல்லாம் எங்கெ இருக்குன்னு தெரியல.
ஊறுகா சாப்பிடுவாரா?
நல்லா காரமா புளிப்பா வேனும். ஒன்னுக்கும்
வழியில்லன்னா, ரெண்டு பட்டமொளவா, ரெண்டு பூண்டு பல்ல வச்சி அம்மியில நவுத்திக்கொடுத்தா அப்படியே சோத்தில பிசஞ்சுப் போட்டு சத்தம் போடாம சாப்பிட்ருவாரு.
கால் நகங்களை காட்டச் சொன்னேன். கோணலும் மாணலாய், மொரடு கட்டி கறுத்திரூந்தது
சர்க்கரை நோய் உண்டா ஐயாவுக்கு?
சர்க்கரை, ரத்தக்கொதிப்பு ஒன்னுங்கிடயாது ஆண்டவன் புண்ணியத்துல. இந்த தல நோவுதான்.
எல்லாவற்றையும் குறித்துக்கொண்டேன். வேறு கேள்விகள் வேண்டாம் எனத் தோன்றியது.
அண்டிமனி க்ரூடம் 30 தினம் காலை, மாலை இரண்டு வேளை . முன்று வாரம். அடுத்த மாதம் இதே மாதிரி வந்துடனும். மருந்து வாங்கிக்கொண்டு கும்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதற்கடுத்த மாதம் வந்தார்கள். எந்த மாற்றமுமில்லை ஸைஸ் அப்படியே இருக்கிறது தூஜா 200 4 டோஸ் ஒவ்வொரு ஞாயிறு காலை ஒரு டோஸ். அண்டிமனிக்ரூடம் 30 தினமும்
அடுத்த மாதம். பாதிக்கட்டியைக் கானோம். தூஜா அடிக்க அடிக்க அம்மி நகர்ந்திருந்தது. இன்னும் இரண்டு மாதங்கள் மருந்து கொடுத்து அனுப்பினோம். டோஸைக் குறைத்து விட்டோம். மூன்று நாளைக் கொருமுறை சாப்பிட்டால் போதும். ஒரே மாதத்தில் கட்டி முழுதும் கரைந்து விட்டது. தலை சொர சொரப்பும் இல்லை. வயதான தம்பதிகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
தமிழ் மறையானுக்கும் எங்களுக்கும் பலம் கூடியிருந்தது. ஒவ்வொரு மாதமும், மூன்றாம் ஞாயிறு காலை ஏழு மணிக்கெல்லாம் செல்ஃபோன் அழைக்கிறது. ஜெய் பீம், ஜெய் புத்தம், தமிழ் மறையான் பேசுறேன். இன்னிக்கு முகாம் டாக்டர்…….. . .

No comments:
Post a Comment