அவகாட்ரோ கொள்கையும்
ஹோமியோபதியும்
ஒரு கிராம் மோல்
= 6.02x10^23 மாலிக்யூல்கள்
48.46 கிராம் சோடியம்
குளோரைடு( நேட் மூர்) =6.02*10^23 மாலிக்யூல்கள்
மேசை மேல் 30 கண்ணாடி
வயல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 99 சொட்டுகள் ஆல்கஹால் விடப்பட்டுள்ளது.
முதல் பாட்டிலில் ஒரு சொட்டு நேட் மூர் திரவம் சேர்க்கப்படுகிறது. அந்த பாட்டில் 10 முறை குலுக்கப்படுகிறது. இவ்வீரியம்
1சீ. அதாவது 100 சொட்டில் ஒரே சொட்டு மருந்து. பின் அதிலிருந்து ஒரு சொட்டு அடுத்த
பாட்டிலில் சேர்க்கப் படுகிறது. மீண்டும் குலுக்கல்.இப்போது 2சீ. இப்படி ஒவ்வொரு முறையும்
ஒரு சொட்டு அடுத்த பாட்டிலுக்கு சேர்க்கப்படும் முப்பதாவது பாட்டில் வரை. ஆரம்பம் ஒரே சொட்டு தாய்த் திரவம் முப்பதாவது பாட்டிலில் உள்ள நேட்முர் 30சீ என அழைக்கப்படும்
.இக் கொள்கையின் பெயர் வீரியப்படுத்தல் கொள்கை.
ஹோமியோபதியில் வீரியப் படுத்தப்பட்ட மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். ஹானெமன்
3சீ,6சீ,12சீ,18சீ,24சீ,30சீ,200சீ,1000சீ=1 வீரியங்களையே பயன்படுத்தினார்.
சரி வீரியப்படுத்தலின்போது
அவற்றில் மாலிக்யூல்களின் எண்ணிக்கை எப்படியிருக்கும்?
முதல் பாட்டில் 1சீ= 6.02*10^23
__________ =6.02*10^21
10^2
இரண்டாம் பாட்டில்=2சீ
=6.02*10^19மாலிக்யூல்கள்
மூன்றாம் பாட்டில்=3சீ =6.02*10^17
“
=4சீ =6.02*10^15
“
=5சீ =6.02*10^13
“
=6சீ =6.02*10^11
“
=7சீ =6.02 *10^9
“
=8சீ =6.02*10^7
“
=9சீ =6.02*10^5
“
=10சீ =6.02*10^3 “
=11சீ =6.02*10^1 “
பன்னிரெண்டாம்பாட்டில்=12சீ=6.02*10^-1
ஆக 12சீ வீரியத்திலேயே
நேட்ரம் மூரின் மாலிக்யூல்கள் இல்லாமல் போகிறது. அப்படியானால் எப்படி வேலை செய்கிறது
என்ற கேள்வி எழுகிறது? ஃப்ரென்ச் விஞ்ஞானி
பென்வெனிஸ்டே விளக்கியப்படி உயர்
வீரியப்படுத்தலில்
ஆரம்ப நேட்ரம் மூரின் ரசாயன நினைவை வீரியப்படுத்தப்பட்ட மீதமுள்ள சாராயக் கரைசல் இருத்தி வைத்திருக்கிறது. அதனால்தான்
ஹோமியோ மருந்துகள் வேலை செய்கின்றன என்பதே இன்றுவரை சொல்லப்படும் விளக்கமாகும்.
அவகாட்ரோவும்,
ஹானெமனும் சம காலத்தவர்கள்.
வீரியப் படுத்தப்பட்டக்
கரைசலில் உள்ள மருந்தின் அணுக்களின் எண்ணிக்கையை அளவிட்டுத் துல்லியமாய் சொல்ல இன்றுவரை
அறிவியல் ஒரு கருவியைக் கண்டு பிடிக்காதது துரதிர்ஷ்ட வசமானது.
இப்போதுதான் முதல்
ஆரம்பமாக மும்பை ஐ ஐ டீ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர்.. அறிவியலின் எந்த வளர்ச்சிக் கட்டத்தில் தீர்வு வரும்
என்பதை அறிவியலின் இயங்கியலே தீர்மானிக்கும்.
மார்க்கோனி மட்டும் கம்பியில்லாத் தந்தியை 30 ஆண்டுகள் முன்னரேயே கண்டுபிடித்திருந்தால் சைபீரியாவில் ஃப்ரென்ச் ராணுவத்தின் எண்ணற்ற உயிர்ச் சேதத்தைத் தடுத்திருக்க முடியும்; ஆனால் கண்டுபிடிக்கும் அளவிற்கு அன்றைய அறிவியல் வளர்ச்சிக் கட்டத்தை எட்டவில்லை என்பதே உண்மையென்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியிருப்பது நினைவுக்கு வருகிறது.
No comments:
Post a Comment