இரு சிகிச்சை அனுபவங்கள்
15 வருடங்களுக்கு முன்னால், ஹோமியோபதிக் கல்வி 3 வருடங்கள் முடித்து, சிகிச்சை அளிக்க ஆரம்பித்த தொடக்க காலம். ஒரு நாள் மாலைஎன் அலுவலக நண்பர் ஒரு துயரரை அழைத்து வந்தார். அவருக்கு ,சாலை விபத்தில், காலில் இரண்டு இடங்களில் சைலன்சர் சுட்ட தீக் காயங்கள். ஒன்று சிறியது. அலோபதி சிகிச்சையில் காயம் முற்றிலும் ஆறியிருந்தது. மற்றொன்று பெரிய புண். அறுவை சிகிச்சையில் தான் குணமாக்க முடியும்; வேறு இடத்திலிருந்து சதையை எடுத்து ஒட்டவைத்து நலமாக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சீ.எஸ்.ஐ கல்யானி ஹாஸ்பிடலிலில் ஆபரேஷன் செய்ய 12000 ரூபாய் பிடிக்கும் ; ஒரு வாரம் கழித்து வந்து உள் நோயாளி பிரிவில் அனுமதி பெறுங்கள் எனவும் அறிவுறுத்தியிருந்தனர்.
இவருக்கு ஏதாவது ஹோமியோவில் உதவி செய்ய முடியுமா ? என்று என் நண்பர் வினவினார்.
காயம் பெர்தாகவும், சீழ் வைத்தும் இருந்தது; ஊண் நீர் வடிந்தது; எனக்கு, உண்மையில் , மனதில் அச்சமாய் ஒரு எண்ணம்; நம்மால் முடியுமா?
இரண்டு மாத காலம் பிடிக்கலாம்; காற்றுப்படும்படி , வேஷ்டி தான் அணிய வேண்டும்; சம்மதமா? எனக் கேட்டேன். அவரோ எல்லா நிபந்த்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டார்.
அன்றைய நிலையில் காந்த்தாரிஸ் தாய்த்திரவம் வெளிப் பூச்சுக்கும் உள்ளுக்கு, காந்த்தாரிஸ் 30 மூன்று வேளையும் எழுதிக்கொடுத்து அனுப்பினேன். ஒரு மாத காலம் கழித்து வந்து காட்டவேண்டும் ‘ என்று அறிவுறுத்தினேன்.
30 நாட்கள் கழித்து அவர் வந்தபோது எனக்கே ஆச்சரியமாய் இருந்தது, காயம் பட்டிருந்த இடத்தில் வெளிறிய சிவப்பு நிறத்தில் புதிய தோல் வளர்ந்த்திருக்கக்கண்டேன். வெள்ளையும், கறுப்புப் புள்ளிகளும் காணப்பட்டன.
15 ஆண்டுகளுக்கு முன்னால், தச்சு வேலை செய்யும் தொழிலாளிக்கு, வெறும் 35 ரூபாய் செலவில், தாய்திரவம் வாங்கி, தன் தீக்காயத்தை நலமாக்கிகொண்டு 12000 ரூபாய், செலவை தவிர்க்க முடிந்தது.ஆரம்ப கால அணுபவம்; மனதில் அற்புதமாய் படிந்தது.
சென்ற மாதம், என் அலுவலகத்தோழி தன் சகோதரனை அழைத்து வந்தார், அவரது இடது புட்டத்தில் ஒரு இரண்டு அங்குலம் அகலத்திற்கு ஒரு பச்சைப்பண். குழி ஆழமாய், ஒரு விரக்கடை உள் நுழையும் அளவிற்கு. சீழ் கோர்த்திருந்தது. ஏற்கனவே, அல்லோபதி சிகிச்சை பலனேதும் கிடைக்கவில்லை. இரு வேறு மருத்துவர்கள் ஆண்டி-பயாடிக் மருந்துகள் கொடுத்திருந்த்தனர்.
ஹோமியோபதி மருந்துகளில் , சிறப்புப்பிரிவான நோஸோடுகளிலிருந்து, ஸ்ட்ரெப்டோகாக்கினம் 1 M வீரியம் தெரிவு செய்து 3 நாட்கள் காலை, மாலை இரண்டு வேளை உட்கொள்ளும்படி சொன்னேன். 3 நாட்களுக்குப்பின், சீழ் பிடிப்பது குறைந்த்திருந்தது. வலி இல்லை. ஆனாலும் காயம் ஆறவில்லை , குழிப்புண்ணாகவே இருந்தது. பின், லாக்கெஸிஸ் 30 வீரியத்தில், தினமும் காலை 4 உருண்டைகள் எடுக்கும்படி ஒரு வாரம் அவகாசம் தந்தேன். மீண்டும் 1 வாரம் கழித்து, மிரிஸ்டிகா செபிபெரா 200 தினமும் இரு வேளை 1 வாரத்திற்கு எழுதிக் கொடுத்தேன்.
10 நாட்கள் கழித்துதான் வந்தார். புண் முற்றிலுமாகக் குணம் அடைந்த்திருத்தது. எனது நேரத்தை வீணாக்கவில்லை என மனம் குதூகலித்தது.

No comments:
Post a Comment