Wednesday, 15 January 2014

ஹோமியோபதியின் புகழ் பரப்பும்- தஸ்தயேவ்ஸ்கியின் சாகா வரம் பெற்ற வரிகள்

The Brothers Karamazov (1880), a dialogue in which one of the brothers tells the other:

“Homeopathic doses perhaps are the strongest“:
“But you have the thousandth of a grain. Homeopathic doses perhaps are the strongest. Confess that you have faith even to the ten thousandth of a grain.”

தஸ்தாயேவ்ஸ்கி ஏன்/எப்படி தனது நாவல் ப்ரொதெர்ஸ் காரமசோவில் ஹோமியோபதியைப் பாராட்டிப் பேசுவதாக உரையாடலை அமைத்தார்?

தஸ்தயேவ்ஸ்க்யின் தந்தை ஒரு மருத்துவர். தாய் ஒரு காச நோயாளி; தஸ்தயேவ்ஸ்கி வலிப்பு நோயால் அவதிப்பட்டவர்.தாயிடமிருந்து ஸ்வீகரித்துக் கொண்ட TB MIASM காரணாமாய். அவர் இறுதியில் Emphysema நோயில் அவதியுற்று நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்து போனார்.

குடும்பத்தில் எல்லோருக்குமே தந்தை டாக்டர் தஸ்தாயேவ்ஸ்கி வழமையான மருந்துகள் கொடுத்து பலனில்லையென்றால், ஹோமியோபதி மருந்துகள் கொடுப்பது வழக்கம், எனவே தந்தையிடமிருந்து தான் ஹோமியோபதி அறிமுகம் தஸ்தாயேவ்ஸ்கிக்குக் கிடைத்திருக்கிறது.தொண்டை வலிக்கும் குரல் எழும்பா நிலைக்கும் ஹோமியோ மருந்துகள் எடுத்துக்கொண்டதாக பதிவுகள் இருக்கின்றன. துயர் நீங்கியதா இல்லையா என்பது தெரியவில்லை

 அவர் ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை கொள்கைகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு கிரெய்னில் ஆயிரத்தில் ஒரு பங்கு தான் மருந்தின் அளவு என்றாலும் அது வலிமையானது என பாத்திரங்கள் உரையாடுகின்றன. ”உண்மையைச் சொன்னால் பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்றாலும் உனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று சொல்.!” என்று மீள் அழுத்தத்தோடு, அடுத்த வரி உரையாடுகிறது.

தஸ்தயேவ்ஸ்கி இந்நாவலை 1880ல் எழுதிமுடித்தார் 1881ல் இறந்து போகிறார். சிறுவனாய் தான் அறிமுகம் பெற்ற ஹோமியோபதி மருத்துவத்தைக் கடைசி வரை புகழ்ந்து பேசுபவராகவும் இருக்கிறார். ( நன்றி-டனா உல்மான்)

No comments:

Post a Comment