Wednesday, 15 January 2014

ஓ நாய்ப்பாலும் ,அசோகமித்திரன்,பெருமாள் முருகன் சிறுகதையும்

அசோக மித்திரனின் கிணறு மற்றும் பெருமாள் முருகனின் நீர் விளையாட்டும்- ஓ நாய்ப்பாலின் மெய்ப்பிக்கப்பட்ட குறியும்


 ஒநாய்ப்பால் , ஹோமியோபதியில் மருந்தாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மெய்ப்பித்தலின் போது தோன்றிய குறிகளைத் தொகுத்து அவற்றிலிருந்து தீம்களை உருவாக்கினார் நான்சி ஹெர்ரிக்- அமெரிக்க மன நல மருத்துவர் ஹோமியோ மருத்துவராக பரிணமித்தவர்.

தோன்றிய பல தீம்களில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு முக்கியமான ஒன்று “ தண்ணீரில் கண்டம்-ஆபத்து- நீரில் அகால மரணம் நேரும் என எண்ணுவது, நம்புவது. ஒரு பிறழ் நம்பிக்கை எனவும் கொள்ளலாம்.

தமிழ்ச் சிறு கதைகளில் உடனே என் நினைவுக்கு வருவது அசோகமித்திரனின் ’கிணறு’ மற்றும் பெருமாள் முருகனின்’ நீர் விளையாட்டு. ’

இரண்டிலும் கிணறு முக்கிய பங்கு வகிக்கிறது .
ராஜஸ்தான் கோட்டை போன்ற வழிபுரியா சந்துகள் நிறைந்த ஒரு மாளிகையில் தங்கி இருப்பவனின் உணர்வு அவனுக்கு நீரில் தான் கண்டம் என்பது. அச் சிறு கதையின் முடிவில் , அவன் அறைக்குக் கீழே இருந்த புராதன , மர்மம் சூழ்ந்த கிணற்றில் வீழ்ந்து இறக்கிறான்.

பெருமாள் முருகனின் நீர் விளையாட்டிலும் விருந்தாளியாக ஊருக்கு வந்த ஒருவன் உறவுக்கார சிறுவர்களோடு ஒரு பெரும் கிணற்றில் இறங்கிக் குளிக்கிறான். போதும் கரையேறலாம் என்று எண்ணும்போதுதான் வருகிறது விணை. அவனை விடுவதாயில்லை அச் சிறுவர்கள். கரையேறும் அவனைக் காலைப் பிடித்திழுத்து நீரில் தள்ளுகிறார்கள் மேலும் தங்களோடு நீச்சல் விளையாட. இறுதியில் கிணறும் , நீரும் அவனைப் பலிகொள்கின்றன. நீரில் தன் மரணம் எனும் உணரும் தருணம் முக்கியமான ஒன்று. எழுத்தின் செறிவு காட்சிப் புலனுக்கு வண்ணம் தீட்டி படைப்பை மிளிரச் செய்கிறது.

ஓநாய்ப்பாலின் முக்கிய குறியான நீரில் கண்டம் எனும் தொன்மத்தோடு இவ்விரண்டு சிறு கதைகளும் பொருந்துகின்றன.

விஞ்ஞானிகள், நிலத்தில் வாழ்ந்த ஓநாய்க் கூட்டங்கள், தங்கள் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில், கடலை நோக்கிச் சென்றதாக நம்புகிறார்கள். அதிலிருந்துதான், கடல் ஒ நாய்களும், இன்றைய டால்ஃபின்களும் தோன்றியாதாகவும் தோராயமான கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள்..

ஓ நாய்ப்பாலில் தோன்றும் ஒரு குறி , மனித வாழ்வின் இறண்டரறக் கலந்துள்ள ஒரு தொன்மத்தோடு இணைவதும், சிறுகதையில் வெளிப்படுவதும் விந்தை தான். —. 

No comments:

Post a Comment