வலிகள் பலவிதம்.
திரு சா. கந்தசாமியின் ’”முன்னிரவிற்குப்பிறகு சிறு கதையிலிருந்து’” .………….
'" இரவு மணி இரண்டு இருக்கும். போர்வையை காலால் உதறித் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன். பல் வலி தாங்க முடியவில்லை.வலிப்பது கீழ்ப்பல்லா மேல் பல்லா என்பது கூடத் தெரியவில்லை.இடது பக்கத் தாடை முழுதும் வலித்துக் கொண்டிருக்கிறது.’” ………….( ஆர்ஸெனிக்கம் ஆல்பம், சாமோமில்லா.)
’”வலிக்கும் தூக்கத்திற்கும் தீராத பகை. தூக்கத்தை வலி விரட்டி அடித்து விடுகிறது. அது பல் வலி, கால் வலி , கண் வலி, மூட்டு வலி , வயிற்று வலி என்கிற பேதமெல்லாம் இல்லை. வலி அவயவத்தின் மீது ஆட்சி செலுத்துகிறது. தூங்க, சிரிக்க, ஆட, பாட, ஓட, எதற்கும் விடுவதில்லை. வலி சங்கிலி போட்டு ஆளைக் கட்டிப்போட்டு விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் வலி போல் ஆளைக் கொல்லாமல் கொல்வது வேறு ஒன்றுமில்லை.’” (மலர் மருந்து செர்ரிப் ப்ளம்)
‘” நான் சின்ன வயதில்-ஒன்பது, பத்து வயதில் தென்னை மரத்திலிருந்து கிழே விழுந்துவிட்டேன் காலில் அடி. நல்ல வலி கீழே விழுந்ததும் காலை பிடித்துக்கொண்டு பெரிதாகக் கத்தினேன். அப்ப ஓடி வந்தார். அவிழ்ந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு என்னை ஒரு பார்வை பார்த்தார்.
கோயிலுக்கு தேங்காய் அப்பா…
உன்னை யார் மரம் ஏறச் சொன்னா? என்று கையை பிடித்துத் தூக்கி முதுகில் ஓர் அறை விட்டார். அப்பா கொடுத்த அறையில் கால் வலி மறைந்து போய் விட்டது’” ( ஆர்னிக்கா, ஹைப்பரிக்கம்)
‘” வலிக்கு உருவம், வடிவம் உண்டா? வலி இப்படித்தான் இருக்குமென்று சிருஷ்டித்துக் காட்ட முடியுமா? எதைக் கண்ணால் காண முடிய வில்லையோ அது இருக்கிறது. அதுவும் ஒரே மாதிரி இல்லை. ஆகையால் தனிதனிப் பெயர்கள். ஒரே வலியில் மாட்டிக் கொண்டு தவிக்கிற ஆட்களும் உண்டு. ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு என பல வலிகளில் சிக்கிக்கொள்கிற ஆட்களும் உண்டு.’”
’”நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு பல்வலி வந்து விட்டது மூன்று மூன்றரை மணிக்கு ஆரம்பித்து, நேரம் ஆக ஆக மேலே ஏறிக் கொண்டே இருந்தது. காலைத் தரையில் ஊன்றி நடக்கவே முடியவில்லை.வலி பல்லிலா? காலிலா என்ற சந்தேகம் கூட வந்து விட்டது.’”…….(சாமொமில்லா)
ஆறு மாதத்திற்கு முன்னால் மூக்கிற்குக் கீழே வலி வந்தது. வலிஎன்றால் அப்படியொரு வலி. அந்த மாதிரி வலியை நான் அனுபவித்ததே இல்லை. உயிரே போவது மாதிரி இருந்தது. வாய் விட்டுக் கத்திக் கொண்டே இருந்தேன்…..(ட்ரை ஜெமினல் நூரால்ஜியா? - மாக் பாஸ், ஸ்பைஜீலியா, சாமோ)
இதையெல்லம் எந்த மருத்துவ நூலிலிருந்து நான் மேற்கோள் காட்டவில்லை. எழுதியது சா.க. அடைப்புக் குறிக்குள் பொருத்தமான மருந்துகள் மட்டுமே நான் தந்தது. ஒரு இலக்கிய ஆளுமையால், ஒரே சிறுகதையின் பரப்பிற்குள் வலி குறித்து எழுத முடிந்திருக்கிறது. வலியின் சகல, ஆழ அகல பரிமாணங்களோடு!. சா. க வின் அனுபவப் பதிவுகள் பெருமைக்குரியது.

No comments:
Post a Comment