Wednesday, 15 January 2014

ஹிப்போகிராட்டிஸ், எராஸிஸ்ட்ராட்டஸ் மற்றும் ஹானெமன்

  1. . நாம்  எல்லோரும் அறிவோம். நமது அல்லோபதி மருத்துவர்கள்,மருத்துவக் கல்வி படித்து முடித்தபின், ஹிப்பொக்ரடிஸின் பெயரில் ஒரு சிறப்பான உறுதிமொழி எடுக்கிறார்கள். ஹிப்பொக்ரடிஸ்- மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கிறோம். எந்த மருத்துவ அறிவியல் சார்ந்த மருத்துவராயிருந்தாலும் இம் மாமனிதரை மறக்க முடியாது. ஸ்டெதாஸ்கோப் இல்லாத காலத்தில் துயரரின் நெஞ்சில் தன் காதை வைத்து, சத்தங்களை ஆராய்ந்து, மருந்து கொடுத்திருக்கிறார்.

    இவர் மாணவர் ஹெராஸீஸ்ட்ராட்டஸ் தான் முதன் முதலாக கூட்டு மருந்துகள், கலப்பு மருந்துகள் கொடுக்கக் கூடாது என்ற சிந்தனயைத் தோற்றுவித்தவர். ஹோமியோபதி இக்கோட்பட்டை தனது தலையாய விதியாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. 

    ஹிப்பொக்ராடிஸ் vis medicatriks natura எனும் உள்ளுறை ஆற்றல் ஒவ்வொரு உயிரியிலும் இருக்கிறது, அதுவே வெளியிலிருந்து கொடுக்கப்படும் மருந்துகளுக்கேற்ப வினை புரிந்து துயரரை நலமாக்குகிறது என அற்புதமான ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தார். இகோட்பாடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புழக்கத்தில் இருந்து, தேய்ந்து, மீண்டும் துளிர்த்து ”வைட்டலிஸம்” எனும் புதிய போக்காக மலர்ந்தது. பழைய மருத்துவத்தில் இது ஒரு போக்கு/தடம்.

    1820 களில் ஹானெமன் இக்கோட்பாட்டை, விமர்சனத்துக்கு உட்படுத்தி, ஆத்மா எனும் கோட்பாட்டிலிருந்து, வேறுபடுத்தி, உயிராற்றல் எனப் பெயரிட்டார். இவ்வாற்றல் உள்ளுறையானது, தன்னியக்கப் போக்கு கொண்டது உயிரியில் எங்கும் வியாபித்திருப்பது, எளிதில், பலவீனப்பட்டு, நோயுறும்/ஏற்கும் தன்மை கொண்டது. அவரது வாழ் நாள் முயற்சியெல்லாமே உயிராற்றலை உயிரியில் மேம்படுத்துவதுதான். உயிராற்றல் மேம்பட்டால், தடுப்பாற்றல் வளரும், நோய் விலகும், உயிராற்றல் மலினப்பட்டால் நோய் தாக்கும்/சிறிய கிருமிகள் அடைக்கலம் புகும், மறைவாய் தங்கியிருக்கும். இந்த சிறிய கிருமிகள் ( small animalcule,germs) என ஹானெமனால் 1830ல் அழைக்கப்பட்டன. 

    50 ஆண்டுகள் கழித்து, இக்கிருமிகளை ஆராய்ச்சி செய்து, பிரத்தியோகமாக ஒவ்வொன்றுக்கும், பெயரிட்டு அழைத்தது அல்லோபதி . ஆக, மருத்துவ அறிவியல் வரலாற்றில் ஒவ்வொரு சிந்தனைப் பள்ளிகளும் ஒரு சங்கிலி கோர்ப்பில் வளர்ந்தவை, தொடர்புடையன. பரிணாம வளர்ச்சியில் வேறுபட்டனவாகத் தென்பட்டாலும் ஒரு இயங்கியல் (கருத்து/மோதல் கருத்து/ சங்கமிக்கும் கருத்து) என வியாபகம் கொண்டிருப்பதைக் காணலாம்.கருத்துலக அதிகாரம் தோற்றுவிக்கும் அகம்பாவத்தையும், சட்டாம்பிள்ளைத் தனத்தையும், விலக்கி அறிவியல் பொருத்தப்பாட்டோடு ஒருங்கினைக்கும் முயற்சிதான் இன்றைய தேவை. —.
  2. .

No comments:

Post a Comment