Wednesday, 15 January 2014

பெருமாள் முருகனின் “பெரிதினும் பெரிது” சிறுகதையும் ஹோமியோபதியும்

ஹோமியோபதி கற்பிக்கும்
 பெருமாள் முருகனின் பெரிதினும் பெரிது.

பெருமாள் முருகனின் “ பெரிதினும் பெரிது” சிறுகதை இன்று படித்தேன். ஒரு முறை படித்து முடித்ததும், எனக்கு மிகவும் பிடித்து விட்டது. கண்ணை மூடிக்கொண்டு சிறிது பொழுது மனதுக்குள் கதையை உள் வாங்கினேன். மீண்டும் ஒரு முறை படித்தேன். இன்னும் பிடித்துப் போனது. காரணம் இல்லாமலா பிடிக்கும்?

எல்லா குழந்தை வைத்திய நிபுணர்களையும் திணற வைக்கும் ஒரு ப்ரச்சினை தான் கதைக்கரு. தூக்கத்தில், நடு ராத்திரியில் குழந்தை விழித்துக்கொண்டு ஓயாமல் அழுகிறது. அழுகையின் காரணம் புரியவில்லை. என்னென்னவோ கேட்டுப் பார்க்கிறார்கள். ம்ம்… ஹூம்…... ஒன்றும் விளங்கவில்லை. தந்தை, தாய், பாட்டி மூவரும் நடு இரவில் தூக்கம் கெட்டு அல்லாடுகிறார்கள்.

மழலை பேசும் குழந்தையின் மொழி புரிதலுக்கு ஒரு தனி அகராதி வேண்டும்; ஆனால் அப்படி ஒன்றும் இல்லை; அதுதான் பிரச்சினை. காத்துக் கருப்பு அண்டியிருக்குமோ விளையாடப் போன இடத்தில்? கனவு கண்டு பயந்து அலறுமோ? ஒன்னுக்குப் போறியா? தண்ணி குடிக்கிறியா? எத்தனைக் கேள்விகள்! சரம் சரமாய். பதில் கண்டுபிடிக்க டாக்டர்களால் முடியாது. குத்து மதிப்பாகத்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே திண்டாட்டம்தான்.

நல்ல வேளையாக கதைக் குழந்தை அதன் அம்மாவுக்கு ஒரு க்ளூ கொடுக்கிறது. அது மழலையில் ஏதோ கேட்டு அழுகிறது. அதைக் கொடுத்துவிட்டால் அழுகையை நிறுத்தக்கூடும். விலை மதிப்பற்ற மில்லியன் டாலர் க்ளூ. ””ப் உண்டா”” தான் அதன் தேவை. உங்களுக்குப் புரிகிறதா? எனக்கு நிச்சயமாய் புரியவில்லை. அப்பாவுக்கும் பாட்டிக்கும் புரியவில்லை. செல்ல அம்மாவுக்கு மட்டும் புரிகிறது. ப் உண்டா என்றால் உப்புக் குண்டான். உப்பு சர்க்கரையைக் குறிக்கும். உப்பு என்று சர்க்கரையை சொல்வதுண்டு. குழந்தை உப்பு என்றே மனதிலிருத்திக்கொண்டு விட்டது. சர்க்கரை வைத்துக் கொடுக்கும் ஒரு சிறிய அகல் அளவிற்கு இருக்கும் அந்த உப்புக் குண்டானை எல்லோரும் தேடுகிறார்கள். எங்கோ அம்மிச் சந்தில் கிடைக்கிறது குண்டான்.

அதை கையில் வாங்கியதும், அழுகை போன இடம் தெரியவில்லை. மாயமாய் மறைந்துவிட்டது. மாயமாய்த்தான் கதையை முடிக்கிறார் பெருமாள் முருகன். குழந்தையின் அணைப்பில் இருக்கும் குண்டானிலிருந்து பச்சை மரகதக்கல் ஒளிர்கிறது.எல்லாக் குழந்தைகளும் தேவதைகளே!. தேவதையின் கையில்- மாய மோதிரம், மரகதக்கல்.

இப்படி, குழந்தைகளின் மொழி புரிந்து, நடு நிசி அழுகையை நிறுத்த மருத்துவர்களுக்கு முடியுமானால் உண்மையிலேயே அவர்கள் நிபுணர்கள் தான். ஒவ்வொரு மருத்துவருக்கும் குழந்தையின் காரணம் புரியா அழுகை அவஸ்தை-அனுபவம்-அலாதியானது. நிறையவே இருக்கும்.

கதை ஆரம்பிக்கும் போதே சிகரத்தின் உச்சியில் ஏறிவிடுகிறார் ஆசிரியர், களை கட்டிவிடுகிறது.

“” ஒரு நாளும் நள்ளிரவில் விழித்து இப்படித் தொந்தரவு செய்த குழந்தையல்ல அது. எட்டு- எட்டரைக்குள் தூங்கி விடும். தூக்கத்திலேயே சிறுனீர் கழித்துவிடும். ஜட்டி, போர்வை பக்கத்தில் படுத்திருப்பவரின் ஆடை எல்லாம் நனைந்து நாறும். ஆனால் குழந்தை விழிக்காது.இரவில் விழிக்கும் யாராவது ஈரத்தோடு கிடக்கிறதே என்று பரிதாபப் பட்டுஜட்டியைக் கழற்றி, போர்வையை மாற்றினால் தான் உண்டு.அப்போதும் ஒன்றும் தெரியாமல் தூங்கும். இரண்டு வயது தானே. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் போய் வளர்ந்து விட்டால் சரியாகிவிடும் என்று சமாதானம் கொள்வார்கள். இருமலும் சளியும் இடைவிடாது தொந்தரவு செய்யும் நாட்களில் மட்டும், “ஈரத்துலேயே எருமையாட்டம் படுத்துக் கிடந்தாசளி புடிக்காத என்ன பண்ணும்? என்று பற்களைக் கடித்துக் கொண்டு கன்னத்தில் இடிப்பாள் அவள்.””
Enuresis-படுக்கையிலேயே சிறு நீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. இரவில் படுக்கையை நனைத்துவிட்டு அப்படியே உறங்குவதும் உண்டு. உடை மாற்றுவது கூடத் தெரியாது குழந்தைகளுக்கு, அதுபாட்டுக்குத் தூங்கும்,

ஹோமியோபதியில் இதற்குப் பொருத்தமான மருந்து க்ரியோஸோட்டம்.

இதை அப்படியே விளக்கும் கதையின் முதல் பாரா வைர வரிகளைப் பெருமாள் முருகனால் மட்டும் எழுத முடியும்.!

இனி ஹோமியோபதி மருந்துகளைப் பார்ப்போம்.

முன் இரவிலேயே சிறு நீர் கழித்தால் -- காஸ்டிக்கம், ஸெபியா
 பகலில், படுக்கையில்---- பெல்லடோன்னா, ஃபெர்ரம் பாஸ்

 பையன்கள்----- ரஸ் டாக்ஸ்,

விடலைகள்---லாக்-கானினம்

 சிறு நீர் கழித்தபின் அப்படியே உறங்கும்---க்ரியோஸோட்டம்

 எழுப்புவது கடினம்----க்ரியோஸோட்டம்

 காரணமே தெரியவில்லை---ஈக்விஸெட்டம்

 பனிக்காலம்---காஸ்ட்டிக்கம்

 பயத்தில் படுக்கையில்-- அகொனைட்

 இப்படி எழுதிப்போகிறது ஹோமியோ ஸிந்தெடிக் ரெபர்டரி –மருந்து காண் பேரேடு.
க்ரியோஸோட்டத்தின் முக்கிய மனக்குறி

Child fretful, irritable, agitated screams at nights

 Sorrowful mood, inclined to weep

 Ill humor, moroseness at nights

 Seeks for unpleasant things and broods over them.

மொத்தத்தில், கதைக் குழந்தை. க்ரியோஸோட்டத்தின் உதாரணமாய், இரவில் படுக்கையிலேயே சிறு நீர் கழிக்கும் நடத்தை கொண்ட, இரவில் விழித்து ஏதோ கேட்டு இரவு முழுதும் அழும் குழந்தையைப் படைத்து உலவவிட்டு, வாசகனை ஹோமியோ மருத்துவனாக்குகிறார் இக்கதையின் ஆசிரியர்.

ஹோமியோ ஆர்வலர்கள், மாணவர்கள், மற்றும் எனது நண்பர்கள், இதுவரை படிக்காதிருந்தால் கட்டாயம் படித்துப் பார்க்கவும்.

No comments:

Post a Comment