Saturday, 18 January 2014

டேவிட் மிட்ச்செலின் நாயகன் ஜேசன் டெய்லர்-பதின்மர் பருவத்தில் திக்குவாய் குறையோடு......


திக்குவாய் ஒரு நாவலின் கருப்பொருளாக முடியுமா? அதன் அவசியம் என்ன? அதுவும் , நாவலாசிரியர் அத்தகைய குறைபாட்டோடு வளர்ந்திருந்தால்? தான் தன் பதின்மர் வயதில் பட்ட அவமானத்தை, வலியை பின்னால் முதிர்கிறபோது அதனோடு சமர்த்தாய் வாழ்வது எப்படி என்பதை பிறருக்கு உணர்த்துவதாகத்தானே இருக்க முடியும்.

டேவிட் மிட்ச்செல் black swan green நாவலை இத்தகைய பேசு பொருளை விரிவான பரப்பில் எழுதி இருக்கிறார். அவன் ஐந்து வயது வரை பேசவே இல்லையாம். Delayed milestone. எழாம் வயதில் பேச முயற்சிக்கும்போதுதான் எல்லோருக்கும் புரிகிறது. அவருக்கு stammering இருக்கிறது. வழமையான முயற்சிகளான speech therapy பயின்றிருக்கிறார்.
இந்தப் பின்னனியில், ஜேசன் டெய்லர் பாத்திரத்தை உருவாக்கி தன் நிழலிலேய உலவ விட்டிருக்கிறார். சுய சரிதை நாவல் அல்ல என்றாலும், அவர் உருவம் ஜேசனில் உண்டு.
Stammering, stuttering இரண்டும் ஒன்றுதான் எனப் பலர் கூறினாலும், மிட்ச்செல் இரண்டையும் வெவ்வேறாக விளக்குகிறார். முன்னது வார்த்தையின் ஆரம்பமே ஒலிக்க முடியாத நிலை. வாக்கியத்தில் அந்த வார்த்தையில் ஓட்டை விழுந்தார்ப் போல. பின்னது முதல் எழுத்தை ஒலிக்க முடியும்; ஆனால் மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்திச் சொல்லவேண்டும். இரண்டாம் ஒலி சாத்தியப் படா நிலை. நாவல் முழுக்க வேறு வேறு சம்பவங்களில், ஜேசன் இக்குறையோடு வாழப் பயில்கிறான்.

திக்குவாய்க் குறையை கருப் பொருளாக்கி, ஏற்கனவே kings speech என்றொரு திரைபடம் வந்திருப்பதாக தெரிகிறது, ஷேக்ஸ்பியர் நாடகத்தை அடியொற்றி.

மிட்ச்செல், திக்குவாய்க் குறையை, தனது எதிரியாக எண்ணக் கூடாது: அதைத் தனது மன திடத்தால் எதிர்கொள்ளவேண்டிய ஒன்றாகவும் கருதக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார். வார்த்தையின் ஆரம்பத்தில் ஒரு உயிரெழுத்து சேர்த்தால் தடங்கல் வராது என்பன போன்ற க்ளூக்களெல்லாம் தருகிறார். மற்றவர்களுக்கு சொல்லி உணர்த்த அவர் நினைத்த விஷயங்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார். நாவல் வெற்றி பெற்றிருக்கிறது

 சரி. ஹோமியோபதியில் திக்குவாய்த் தடங்களுக்கு மருந்துகள் பார்க்கலாம்.
Rubric
 Stammering 3 marks belladonna ,causticum, mercsol, nuxvomica, stramonium
 2 marks aconite, arg nit, bov, bufo, cann.ind,cupr, kalibrom.lach, phos, plat, sulph etc
 Coition after……… cedron
 Dentition during-----stramonium
 Excitement-----agaricus, causticum
 Exerts himself long time before he can utter a word stram
 Fast when talking----- lac-can

இப்படி சில குறிப்பிட்ட தருணங்களில் ஏற்படும் தடங்கலுக்கும் இங்கே விஷேஷ கவனம் குவிகிறது, மருந்துகளும் இருக்கிறது
 எனது நெருங்கிய நண்பரின் மகள் சிறுமியாக இருந்தபோது, இக்குறை காணப்பட்டது அதைப் பொருட்படுத்தாமல், விவாதிக்காமல் அதை ஒரு குறையாய் எடுத்துக் கொள்ளாமல் , ஆரம்பத்தில் கல்கேரியா கார்ப் ஒரு சில மாதங்களுக்குப் பின் ஸ்ட்ரமோனியம் கொடுத்து வந்தேன் எப்போது நின்றது என்று எங்களுக்கு சரியாக நினைவில்லை. இப்போது அக்குறை இல்லை. இன்று வளர்ந்த பெண் B.H.M.S. நான்காம் ஆண்டு மாணவி. படிப்பில் திறமைகளில் படு சுட்டி.

டேவிட் மிட்ச்செலின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவோம்.

உங்களுக்குத் தெரிந்த குழந்தைகளிடம் இக்குணம் தென்பட்டாமல் , ஹோமியோபதியர்களின் வழிகாட்டலுக்கு உட்படுத்துங்கள். குறை கட்டாயம் நீங்கும்.

No comments:

Post a Comment