Wednesday, 15 January 2014

காலி ப்ரோமேட்டம்- ஒரு துயரர் சரிதை

நண்பனின் தந்தை, வயது 82. 3 வருடஙளுக்கு முன்
 அவருக்கு இருதய நோய்க்காக ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது; ஸ்டெண்ட்டும் பொருத்தப்பட்டது. தற்சமயம் அவரது ப்ரச்சினை தன்னைக் கைது செய்ய போலீஸ் வந்திருப்பதாகக் கூறுகிறார்.தான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ததில் தவறு நேர்ந்து விட்டது; அதனால் தான் கைது செய்ய போலீஸ் வருகிரது என்று வருந்தவும் செய்கிறார். தனது மருமகள் தான் போலீஸுக்கு தகவல் தந்திருப்பதாக சந்தேகிக்கிறார். சாப்பிட மறுக்கிறார்.
நண்பனிடம் காலி புரோமேட்டம் 30 5 டோஸஸ்- 3 நாட்கள் இடைவெளியில் 1 டோஸ் காலையில் கொடுக்க அறிவுறுத்தினேன்.
ஒரெ மாதத்தில் அவரது மனத்துயர் முற்றிலுமாய் நீங்கியது.

No comments:

Post a Comment