Wednesday, 15 January 2014

சீ.எஸ். சந்திரிகாவின் ஷெஹெர்பான் சிறுகதையும், லாக் ஈக்வினம் மருந்தும்



மலையாள எழுத்தாளர், சீ எஸ் சந்திரிகாவின்
“ஷெஹர்பான்” சிறுகதை. கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வாசிக்க முடிந்தது.

தன் கணவனின் அதீத காமத் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல், உடலெங்கும் ஊமைக் காயங்களோடு, மனமும் காயப்பட்டு, -கணவனின் நிலையை எங்கே பிள்ளை சிராஜ் தெரிந்துகொண்டு விடுவானோ எனும் குற்றவுணர்வு வேறு- திண்டாடுகிற, 36 வயதேயான, இன்னும் சொச்ச வாழ்க்கையையும் எப்படி என்கிற கேள்வியோடே பரிதவிக்கும் பெண் பாத்திரம் ஷெஹர்பான்.

காயங்களுக்கு மருந்து தரும் வைத்தியன் ஒரு ஆலோசனை சொல்கிறான். கணவனுக்குக் குதிரை மூத்திரம் வாங்கிக் குடிக்கக் கொடுத்தால் அவனது காம வேகம் தணியும் .

தன் பிள்ளையை இதற்காக கன்னியாகுமரிக்கு அனுப்புகிறாள். பையன் கொண்டுவந்ததும், அதைக் கஞ்சியில் கலந்து தருகிறாள். அவனோ வாடை ஏதோ வருகிறது என்று கூறிக் கீழே கொட்டிவிடுகிறான். இருந்த ஒரே நம்பிக்கையும் போக பிள்ளையை கட்டிக் கொண்டு அழத் தோன்றுகிறது ஷெஹர்பானுக்கு. இது தான் கதையின் சுருக்கம்.

பெண்ணிய நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் குதிரை மூத்திரம் அவளது துயர் தீர்க்கும் நம்பிக்கையாக , வைத்தியன் வழிவந்த உபதேசத் தகவலேயாயினும், ஒரு தொன்மம் போல் பின்னப்பட்டிருக்கிறது. கட்டுக்கடங்காத ஒரு
 ஆண்குதிரையின் அதீதக் காமச் ஷேஷ்டைகளை அடக்க இன்னொரு குதிரையின் மூத்திரம் தேவைப்படுகிறது.

தமிழ்க் கலாச்சாரத்தில் கழுதைப்பால், குழந்தைகளுக்கு, செவ்வாப்பு நோய் கண்டால் கொடுக்கும் வழக்கம் நாம் அறிந்ததே. ஆனால் குதிரை மூத்திரம்…. அதன் மருத்துவப் பயன்? கேரளத்தில் இப்படியொரு வழக்கம்?
ஹோமியோ அறிவியலில், அமெரிக்க ஹோமியோபதியர், நான்சி ஹெர்ரிக் குதிரைப்பாலை, மருந்தாக மெய்ப்பித்திருப்பதை நான் வாசித்திருக்கிறேன். இக் குதிரைப் பால், மிகச் சிறிய அளவிலேனும் சேகரிக்க அவரது முயற்சிகளும், நிரூபித்தலின் போது , தோன்றியக் குறிகளும் ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன.. உடல் சார் குறிகளைப் போலவே, மனம் சார் குறிகளும், முக்கியக் கவனக் குவிப்பைப் பெற்றுள்ளன.
குதிரைப்பால் ஆண்களுக்குக் கொடுக்கப் பட்டதும் அவர்களது காம விழைவு குறைந்து விட்டிருக்கிறது. இப்பதிவு நிச்சயம் இருக்கிறது.
Rubrik MALE- sexual, passion diminished
 Female, sexual passion diminished, increased after menses.:
பெண்களுக்கும் இதே பதிவு இருக்கிறது. ஒரு சிறிய வித்தியாசம்- அவர்களுக்கு அடுத்த சுழற்சி மாதவிடாய் வரும் வரைதான் அக்குறைவு நீடிக்கிறது.

ஷெஹர்பானின் மற்றைய குணங்கள் குதிரைப்பால் குறிகளோடு பொருந்திவருகின்றன.
அவள் கடும் உழைப்பைக் கொண்டவள். தனது மூன்று செண்ட் நிலத்தைத் தானே தனியாகக் கொத்துபவள்-----அதீத உழைப்புத்திறன்

Lac equis is usually high strung, restless, adventurous,,having a manic energy at work

பிள்ளைக்குக் கேட்டுவிடுமோ எனும் குற்றணர்வு
Lac equis, have a sense of guilt, when they involve in anything which is joyful

தன் கணவனது படுக்கை ஆக்கிரமிப்புகளால் தான் வதைக்கப் படுகிறோம் எனும் கூருணர்வு
Lac equis, are usually frustrated, having a feeling of being victimised

மேலே சொன்ன குணங்கள் . திரு ஃபிலிப் எம் பெய்லி- பால் மருந்துகளில் அதிக ஆராய்ச்சி செய்துள்ள ஹோமியோபதியரிடம் வந்த துயரர்களின் சரிதையிலிருந்து தரப்பட்டுள்ளது

 ஷெஹெர்பான் ஒரு லாக் ஈக்வினம்- குதிரைப்பால் துயரர்.கேரளத்து சிறுகதையின், குதிரை மூத்திர தொன்மத்திற்கும், ஹோமியோபதியின் குதிரைப்பால் மெய்ப்பிக்கும் கட்டமைப்புக்கும் நெருக்கம் இருக்கிறது. இலக்கியத்தைப் போலவே ஹோமியோ அறிவியலும் ஒரு வாழ்கலை.





Photo

No comments:

Post a Comment