Wednesday, 15 January 2014

ஜெய மோகனின் “விசும்பு” சிறுகதையை முன் வைத்து......

”விசும்பு”--ஜெயமோகனின் சிறு கதையிலிருந்து.

”’வலசைப் பறவைகளின் காதுக்குப் பின்னால் மூளையின் ஓர் அபூர்வ அமைப்பு உள்ளது. என்றார் நஞ்சுண்ட ராவ். அதைத் தன் சோதனைச் சாலையில் பலவிதமான கதிர்களைக் கொண்டு இருபது வருடங்களாக ஆராய்ச்சி செய்தார். பறவைகள் அறியும் அதே அலைவரிசையை அனுப்பி, ஒரு கறுப்பு வால் காட்விட்டை சென்னைக்குப் போகச் செய்தார்.ஒரு டன்லின் பறவையை ராஜஸ்தானத்திலிருந்து வரவழைத்தார்.”’
 …………….
”போடா டேய் என்றார் டாக்டர் கருனாகர ராவ். அவரது தலை தனியாக ஆடியது. ‘பறவை என்ன விமானம் போல எந்திரமா? அது பெரு வெளியின் ஒரு துளி. நீ இப்போது கண்டு பிடித்திருப்பது பறவைகளின் ஓர் இயல்பை மட்டும் தான். இது சம்பந்தமான மற்ற விஷயங்கலைக் காண மறுத்ததால் தான் அது உன் கண்ணுக்குப் பட்டது.”…………….

“உன் அறிதல் முறை பதினெட்டாம் நூற்றாண்டில் ஃப்ரான்சிஸ் பேக்கனால் உருவாக்கப் பட்டது. எதையும் உடைத்து, பிரித்து ஆராய்வது. அதைத்தான் நீ அறிவியல் என்கிறாய். அதை வைத்து இந்தப் பிரபஞ்சத்தின் துளிகளையே அறிய முடியும். முழுமையை நிராகரித்தால் தான் துளிகள் நம் கண்ணுக்குத் தெரியும். பிரபஞ்சம் என்பது ஒரு முழுமை. அதை முழுமையுடன் அறிய முயற்சி செய்.” என்றார் கருனாகர ராவ்.

ஹோமியோ மருத்துவத்தில் சைலீஸியா என்றொரு மருந்து. இம்மருந்தின் ஆளுமைக் குணம் அதால் முழுமையை அறிய முடியாது; துளி அல்லது பின்னத்தைதான் காண முடியும். முழுமையைக் காணப் பிரயத்தனப் பட்டால் துளியைத் துல்லியமாய் அறிய முடியாது. முன் புலத்தை நிராகரித்தால் தான் பின்புலம் தெரியும். இதன் எதிர் மாற்றும் உண்மைதான். ஒரே சமயத்தில் முழுமையையும், துளியையும் அறிய இயலாது. கல்லைக் கண்டால் நாயைக் காணும் ; நாயைக் கண்டால் கல்லைக் காணும் என்பது சைலீஸியாவின் பிளவுண்ட ஆளுமையின் சுருங்கிய வடிவமே. டாக்டர் கருனாகர ராவின் பாத்திரத்தின் எதிர்வினை சைலீஸியாவையே விளக்குவதாய் அமைந்துள்ளது.

ஹோமியோபதி அறிவியல் post modern போக்குகளைக் கொண்டுள்ளதாகக் கூறுவர். இதனால் ஹோமியோபதிக்குப் புதிய மரியாதை ஏதும் கூடுவதில்லை. அல்லோபதி அறிவியலின் மையமான nosography, contrariyaa contraribas curentur ஆகிய கொள்கைகளை(அதாவது முறிவு மருந்துகளைக் கொடுத்தல் கொள்கை மற்றும், நோய் வகைப்பாட்டியல் கொள்கை இரண்டையும்) முற்றிலுமாக விலக்கியது ஹோமியோபதி.

தமிழகத்தில் நண்பர் ராஜேந்திர சோழன் , தனது நூலில், ஹோமியோபதி பின் நவீனத்துவக் கூறுகளைக் கொண்டிருப்பதாகப் பதில் சொல்கிறார். ஆனால், ஃப்ரான்சிஸ் பேக்கனின் அறிவியல் அடிப்படைகளை ஹோமியோபதி எடுத்துக் கொண்டிருக்கிறது. அவரது, novum organum நூல் போன்றே ஹானெமனும் தனது organon of medical art நூலை மணிமொழிகளாகவே எழுதினார். மேலும், பேக்கனின் observation principle தான் ஹோமியோபதியிலும் அடிப்படைக் கொள்கையாகவே எற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

விசும்பில், சைலீஸியாவின் பண்பு விவாதிக்கப் பட்டிருப்பதை ஹோமியோ மாணவர்கள் கட்டாயம் பாராட்டுவர்.

No comments:

Post a Comment