Wednesday, 15 January 2014

மிரிஸ்டிக்கா ஸெபிப்ஃபெரா-- ஒரு துயரர் சரிதை




என் அலுவலகத்தின் கேந்திரமான பிரிவில் பணிபுரியும் ராகவனும் அவரது மனைவியும் தங்கள் பையனை என்னிடம் காட்ட வந்தனர். வயது 16 வலது கன்னத்தில் , தாடைக்கும், கீழ் உதட்டுக்கும் இடையில் சதை வளர்ச்சி; குத்தாய், கெட்டியாய். தொட்டால் மட்டும் வலி.ஒரு அங்குல நீளத்திற்கு சதை திரட்ச்சி. அல்லோபதி மருத்துவர்கள் சொல்லிவிட்ட இறுதித்தீர்வு அறுவை சிகிச்சையே! ப்ளஸ் டூ பரீட்சை தேதி அறிவிக்கப்பட்ட நேரம். எட்டு வருடங்களுக்கு முன் இதே பையனுக்கு கழுத்தில், நிண நீர் கோளங்கள் வீங்கிப் போனபோது, அறுவை சிகிச்சை தவிர்த்து, ஹோமியோபதியில் ஸிஸ்டஸ் கானாடென்ஸிஸ் 200 வீரியத்தில் 2 வாரங்கள் மருந்து சாப்பிட்டு முற்றிலுமாக நலமான நினைவு குடும்பத்தில் ப்ரசித்தம். இந்த முறையும் ஹோமியோ உதவி கேட்டனர்.
அரை மணி நேரம் துயரர் சரிதை குறித்த பின் , மிரிஸ்டிகா செபிபெரா 200 தினமும் இரு வேளை, 4 உருண்டைகள். 3 வாரம். ஞாயிறு காலையில் மட்டும் தூஜா 1000 வீரியம் 1 டோஸ். அன்று மிரிஸ்டிகா கிடையாது. இரண்டு வாரத்திற்குள் முக்கால் வாசி சதைத்திரட்சி கரைந்து விட்டது. ராகவனின் குடும்பத்தில் எல்லோருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி.அடுத்த பத்து நாட்களில் முழுவதும் குணமாகியது. குத்தாக சதை வளர்ச்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது.




51Like ·  · Share.

No comments:

Post a Comment